பொருட்களின் வரி குறைப்பு

5057 0

இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஆறு பொருட்களுக்காக விதிக்கப்பட்டிருந்த விசேட வர்த்தக வரி குறைக்கப்படுகிறது.

நிதியமைச்சர் மங்கள சமரவீர, கொழும்பில் சற்று முன்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து இதனைக் குறிப்பிட்டார்.

விதை உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், பருப்பு, கருவாடு, தேங்காய் எண்ணெய் மற்றும் மரக்கறி எண்ணெய் ஆகிய பொருட்களின் வரிகளே இவ்வாறு குறைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, விதை உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் ஒரு கிலோவிற்கான விசேட வர்த்தக பொருள் வரி 39 ரூபாவாலும், பருப்பு கிலோவுக்காக விதிக்கப்பட்டிருந்த விசேட வர்த்த பொருள் வரி 12 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளன.

அதுபோல் கருவாடுக்காக விதிக்கப்பட்டிருந்த விசேட வர்த்தக பொருள் வரி 50 ரூபாவாலும் குறைக்கப்படுகின்றது.

Leave a comment