அமெரிக்க இராஜதந்திரி – சுமந்திரன் சந்திப்பு

4486 0

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான, பதில் உதவிச் செயலாளர் ரொம் வஜ்டா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

கொழும்பில் நேற்று நடந்த இந்தச் சந்திப்பின் போது, இலங்கையின் நல்லிணக்க முயற்சிகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பில், கொழும்பில் உள்ள அமெரிக்க துணைத் தூதுவர் ரொபெர்ட் ஹில்டனும் கலந்து கொண்டார்.

Leave a comment