தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக நாம் தொடர்ச்சியாக போராடுவோம்-யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றிய தலைவர் கே.கிருஷ்ணமேனன்
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் நாம் தொடர்ச்சியாக போராடுவோம் என யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றிய தலைவர் கே.கிருஷ்ணமேனன் கூறியுள்ளார். அதே சமயம் தமிழ் அரசியல் கட்சிகளும், தமிழ் மக்களும் தங்களுடைய பொறுப்பை அறிந்து சகல அரசியல் கைதிகளினதும் விடுதலைக்காக உழைக்கவேண்டும் என அவர் கூறியுள்ளார். பல்கலைகழகத்தின் சமகால செயற்பாடுகள் தொடர்பாக இன்று (புதன்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே மாணவர் ஒன்றிய தலைவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், தமிழ் அரசியல் கைதிகளுக்கு

