2018 வரவு – செலவுத் திட்டம்: இறுதிக் கட்டப் பணிகள் மும்முரம்

9494 96

2018ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் பாராளுமன்றில் நாளை சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், அதைத் தயார் செய்யும் இறுதிக்கட்டப் பணிகளில் நிதியமைச்சர் மங்கள சமரவீர முழுமூச்சாக ஈடுபட்டுள்ளார்.

அமைச்சர் மங்கள சமரவீரவின் இல்லத்தில் நடைபெற்றுவரும் இப்பணிகளில், நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எஸ்.எச்.சமரதுங்கவும் ஈடுபட்டுள்ளார்.

வழமைபோலல்லாது, இம்முறை வரவு-செலவுத் திட்டம் வாசிக்கப்படுவதற்கு முதல் நாளே அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் மீதான வரிகள் குறைக்கப்பட்டிருப்பதுடன், அவை உடனடியாக இன்று (8) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாளை சமர்ப்பிக்கப்படவிருக்கும் வரவு-செலவுத் திட்டத்தில் பொதுமக்களுக்கு நன்மை பயக்கும் வகையிலான பல அறிவிப்புக்கள் இருக்கும்; இருக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Leave a comment