பாராளுமன்றம் அமைந்துள்ள இடப்பகுதியின் உரிமையினை மாற்ற திட்டம்

4351 18

பாராளுமன்ற கட்டிடத்தொகுதிக்காக பயன்படுத்தப்படுகின்ற இதுவரை பாராளுமன்றத்திற்கு உரித்தற்று காணப்படுகின்ற இடப்பகுதியின் உரிமையினை முறையான முறையில் இலங்கை பாராளுமன்றத்திற்கே பெற்றுக் கொடுப்பது தொடர்பான அமைச்சரவை பத்திரத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பாரிய நகரம் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கே அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த இடப்பகுதி இதுவரை நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment