குண்டு வீசி 30 பேரைக் கொன்ற வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

4932 11

பிலியந்தலை பஸ் தரிப்பிடத்தில் வைத்து பஸ் ஒன்றின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தி 30 பேரைக் கொன்ற வழக்கில், குற்றவாளியாக இனங்காணப்பட்ட நபருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. 

2007ம் ஆண்டு ஏப்ரல் 25ம் திகதி இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றின் மீதே இவ்வாறு குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, 30 பேர் பலியானதோடு சுமார் 42 பேர் வரை காயமடைந்தனர்.

இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பில், தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்று இந்த வழக்கின் தீர்ப்பை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பியசேன ரணசிங்க அறிவித்தார்.

இதற்கமைய, குற்றவாளியாக இனங்காணப்பட்ட அவருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

Leave a comment