தேங்கிக் கிடக்கும் வழக்குகளை விசாரிக்க விசேட மேல் நீதிமன்றம்

343 0

நாட்டில் தேங்கி கிடக்கும் வழக்குகளை விசாரித்து துரித கதியில் தீர்ப்பினை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் விசேட மேல் நீதிமன்றம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதனடிப்படையில், பிரதம நீதியரசரினால் பெயர் குறிப்பிடப்பட்ட மூவர் அடங்கிய நீதிபதிகளினை கொண்ட மேல் நீதிமன்றம் ஒன்றை அரசியலமைப்பின் 105 (1) (எ) பிரிவின் கீழ் ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்தொதுக்கப்படுகின்ற குற்றங்கள் தொடர்பில் வழக்கு விசாரணைகளை சட்டமாதிபரின் வேண்டுகோளின் அடிப்படையில் பிரதம நீதியரசரினால் அந்நீதிமன்றத்திற்கு ஒப்படைப்பதற்கும், அந்நீதிமன்றத்தின் தீர்ப்புகளுக்கு எதிராக உயர் நீதிமன்றத்திற்கு நேரடியாக மேன்முறையீடுகளை முன்வைப்பதற்கு ஏதுவான முறையில் சட்ட மூலம் ஒன்றை வரைவதன் மூலம் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

Leave a comment