வட்டுவாகல் முகத்துவாரம் கடலுடன் வெட்டி இணைப்பு

Posted by - November 13, 2017

முல்லைத்தீவில் அண்மைய நாட்களாக பெய்த கனமழை காரணமாக நந்திக்கடல் நீரேரி நீர்மட்டம் அதிகரித்ததன் காரணமாக வயல் நிலங்கள் பல நீரில் மூழ்கியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு நந்திக்கடல் கடலுடன் சங்கமிக்கும் பகுதியான வட்டுவாகல் முகத்துவார பகுதி கடலுடன் வெட்டி இணைக்கபட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபருடன் நேற்றையதினம் இந்த முகத்துவார பகுதியை கடலுடன் வெட்டி இணைப்பது தொடர்பாக கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது இதற்க்கு அமைவாகவே இன்றையதினம் குறித்த முகத்துவார பகுதி கடலுடன் வெட்டி இணைக்கபட்டுள்ளது.

யாழில் மூவர் மீது வாள்வெட்டு!

Posted by - November 13, 2017

யாழில் மூவர் மீது நேற்று வாள்வெட்டு இடம்பெற்றுள்ளது. வாள்வெட்டுக்கு இலக்காகிய மூவரும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  யாழ்ப்பாணம் பிரதான வீதியில் இருவர் மீது வாள்வெட்டு மேற்கொள்ளப்படுள்ளதுடன், ஈச்சமோட்டை வீதிப் பகுதியில் ஒருவர் மீதும் நேற்று வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.  பிரதான வீதியில் உள்ள சலவை தொழிலில் தின் உரிமையாளர் மற்றும் சலவைதொழில் நிலையத்தில் நின்ற நபர் மீதும், ஈச்சமோடாடை பகுதியில் முச்சக்கரவண்டியில் வந்த இருவர் இளைஞனை துரத்தி துரத்தி வெட்டியுள்ளனர். இவ்வாறு வாள்வெட்டுக்கு இலக்காகிய கலைச்செல்வன் (வயது 47)

வரவு–செலவு திட்டம் அரசுக்கு எதிராக குரல் கொடுக்கும் எதிரணியின் வாயை அடைக்கும்-மனோ

Posted by - November 13, 2017

எதிர்வரும் 2018ஆம் ஆண்­டுக்­கான வரவு–செலவுத் திட்டம் எங்­க­ளுக்கு எதி­ராக குரல் கொடுக்கும் எதி­ர­ணியின் வாயை அடைக்கும் என தேசிய சக­வாழ்வு கலந்­து­ரை­யாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரி­வித்தார். ரம்­பொட  ஸ்ரீ கல்கி மாணவர் சேவா அமைப்பு ஒழுங்கு செய்­தி­ருந்த இவ்­வ­ருடம் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்­சையில் சித்­தி­பெற்ற மாண­வர்களை கௌர­விக்கும் நிகழ்வு ரம்­பொட தொண்­டமான் கலா­சார மண்­ட­பத்தில் நேற்று  தேசிய சக­வாழ்வு கலந்­து­ரை­யாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ

லிந்துலையில் 50 மதுபான போத்தல்களுடன் மூவர் கைது

Posted by - November 13, 2017

அரசாங்க அனுமதிபத்திரம் இன்றி மதுபானம் அடங்கிய 50 போத்தல்களை முச்சக்கரவண்டி ஒன்றில் ஏற்றிச் சென்றவர்களை லிந்துலை பொலிஸார் நேற்று இரவு கைது செய்துள்ளனர்.ரதல்ல பகுதியிலிருந்து நுவரெலியா – தலவாக்கலை பிரதான வீதியினூடாக மட்டுக்கலை பகுதிக்கு நேற்று இரவு 10.30 மணியளவில் கொண்டு செல்லப்பட்ட போதே இந்த மதுபான போத்தல்களையும், மூன்று சந்தேக நபர்களையும் முச்சக்கரவண்டியுடன் கைது செய்யப்பட்டதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர். அதேவேளை விற்பனைக்காக மதுவரி திணைக்கள அனுமதிபத்திரம் இன்றி கொண்டு செல்லப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்,

இறுதி வரை­புக்­காக நீண்­ட­தூரம் பய­ணிக்க வேண்­டி­யுள்­ள­து-இரா.சம்­பந்தன்

Posted by - November 13, 2017

தற்­போது புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான இடைக்­கால அறிக்­கையே வெளி­வந்­துள்­ளது. இதில் மாற்­றங்கள் நிகழ்­வ­தற்கு இட­முண்டு. ஆகவே இறுதி வரை­புக்­காக நீண்­ட­தூரம் பய­ணிக்க வேண்­டி­யுள்­ள­தாக தெரி­வித்த  எதிர்க்­கட்­சித்­த­லை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் தமிழ் மக்கள் ஏற்­காத எந்த விட­யத்­தி­னையும் தாமும் ஏற்­கப்­போ­வ­தில்லை எனவும் திட்­ட­வட்­ட­மாக அறி­வித்­துள்ளார். அதி­கா­ரப்­ப­கிர்வு என்­பது இனம்­சார்ந்த விடயம் அல்ல. அனைத்து தரப்­பி­ன­ருக்கும் அவ­சி­ய­மா­னது எனக்­கு­றிப்­பிட்ட சம்­பந்தன்  வட­கி­ழக்கு இணைப்பு விட­யத்தில் வாக்­கெ­டுப்பு நடத்­தப்­ப­டு­கின்­ற­போது முஸ்­லிம்­களின் நியா­ய­மான கோரிக்­கை­களை தமிழ் மக்கள் ஏற்­றுக்­கொண்டு தமிழ்

பெற்றோல் விவ­காரம் தொடர்­பான அமைச்­ச­ர­வையின் உப­குழு அறிக்கை

Posted by - November 13, 2017

பெற்றோல் விவ­காரம் தொடர்­பான அமைச்­ச­ர­வையின் உப­குழு அறிக்கை நாளை ஜனா­தி­ப­தி­யி­டத்தில் கைய­ளிக்­கப்­ப­ட­வுள்­ள­தாக அமைச்சர் சரத் அமு­னு­கம தெரி­வித்­துள்ளார். அண்­மைய நாட்­களில் ஏற்­பட்­டுள்ள பெற்றோல் தட்­டுப்­பாடு தொடர்­பான கார­ணத்­தினை கண்­ட­றி­வ­தற்­காக அமைச்­சர்­க­ளான சரத் அமு­னு­கம, பாட்­டலி சம்­பிக்க ரண­வக்க மற்றும் அர்­ஜுன ரண­துங்க ஆகி­யோ­ர­டங்­கிய அமைச்­ச­ரவை உப­கு­ழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டி­ருந்­தது. இந்­நி­லையில் குறித்த உப­குழு எடுத்­துள்ள நட­வ­டிக்­கைகள் தொடர்பில் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளி­டத்தில் கருத்து வெளியிட்ட அமைச்சர் சரத் அமு­னு­கம மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் தெரி­விக்­கையில், அமைச்­ச­ரவை உப­கு­ழு­வொன்று ஜனா­தி­ப­தியால் நிய­மிக்­கப்­பட்­டி­ருந்­தது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்கள் தெரிவு ஆரம்பம்

Posted by - November 13, 2017

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத்தேர்தலின் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஏறாவூர் நகர், காத்தான்குடி மற்றும் ஓட்டமாவடி ஆகிய சபைகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் தலைமையில் இந் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதேவேளை ஏறாவூர் நகர சபைக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் தெரிவு ஒரே கட்சிக்குள் ஏட்டிக்குப் போட்டியாக இரு தரப்பினரால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஸ்ரீலங்கா முஸ்லிம்

7 ஆண்­டு­க­ளுக்குள் 83 பேர் ஜனா­தி­பதி சட்­டத்­த­ர­ணிகள்

Posted by - November 13, 2017

இலங்­கையில் கடந்த ஏழு ஆண்­டு­க­ளுக்குள் 83 பேர் ஜனா­தி­பதி சட்­டத்­த­ர­ணி­க­ளாக நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர். இவர்­களில் 11 பேர் சிறு­பான்­மை­யி­னத்­த­வர்­களை சேர்ந்­த­வர்­க­ளாவர் என தேசிய கொள்கை மற்றும் பொரு­ளா­தார அலு­வல்கள் அமைச்சு சபைக்கு தெரி­வித்­தது. பாரா­ளு­மன்­றத்தில் சனிக்­கி­ழமை வாய்­மூல விடைக்­கான வினா நேரத்தின் போது மக்கள் விடு­தலை முன்­னணி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பிமல் ரத்­நா­யக்க எழுப்­பிய கேள்­விக்கு பதி­ல­ளித்து தேசிய கொள்கை மற்றும் பொருளா­தார அலு­வல்கள் அமைச்சு சபைக்கு ஆற்­றுப்­ப­டுத்­திய தக­வ­லி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. பிமல் ரத்­நா­யக்க எம்.பி. கேள்வி

பரீட்சை திணைக்களத்தில் பல மாற்றங்கள்

Posted by - November 13, 2017

பரீட்சை திணைக்களத்தில் பல மாற்றங்களை கொண்டுவரவுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். குளியாப்பிட்டியவில் ஊடகவியலாளர்கள் மத்தியில் இது தொடர்பில் கருத்து தெரிவித்த கல்வி அமைச்சர் , பரீட்சை திணைக்களத்தின் மீது பொதுமக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை பாதுகாப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் நம்பிக்கை வெளியிட்டார். பரீட்சை திணைக்களத்தின் இரகசியம் மற்றும் நிறுவகத்தின் பரீட்சை பிரிவின் பிரதம அதிகாரியாக செயற்பட்ட பிரதி பரீட்சைகள் ஆணையாளரை சேவையில் இருந்து இடைநிறுத்துவதற்கு சமீபத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் மக்களின் அபிப்பிராயத்தைக் கூறுகின்றதொரு தேர்தலாக எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தல் அமையும்! – நிலாந்தன்

Posted by - November 13, 2017

இடைக்கால அறிக்கை தொடர்பான தமிழ் மக்களின் அபிப்பிராயத்தைக் கூறுகின்றதொரு தேர்தலாக எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தல் அமையப் போகிறது என்று பிரபல அரசியல் ஆய்வாளர் ம.நிலாந்தன் தெரிவித்துள்ளார்.