பெற்றோல் விவ­காரம் தொடர்­பான அமைச்­ச­ர­வையின் உப­குழு அறிக்கை

224 0

பெற்றோல் விவ­காரம் தொடர்­பான அமைச்­ச­ர­வையின் உப­குழு அறிக்கை நாளை ஜனா­தி­ப­தி­யி­டத்தில் கைய­ளிக்­கப்­ப­ட­வுள்­ள­தாக அமைச்சர் சரத் அமு­னு­கம தெரி­வித்­துள்ளார்.

அண்­மைய நாட்­களில் ஏற்­பட்­டுள்ள பெற்றோல் தட்­டுப்­பாடு தொடர்­பான கார­ணத்­தினை கண்­ட­றி­வ­தற்­காக அமைச்­சர்­க­ளான சரத் அமு­னு­கம, பாட்­டலி சம்­பிக்க ரண­வக்க மற்றும் அர்­ஜுன ரண­துங்க ஆகி­யோ­ர­டங்­கிய அமைச்­ச­ரவை உப­கு­ழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டி­ருந்­தது.

இந்­நி­லையில் குறித்த உப­குழு எடுத்­துள்ள நட­வ­டிக்­கைகள் தொடர்பில் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளி­டத்தில் கருத்து வெளியிட்ட அமைச்சர் சரத் அமு­னு­கம மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில், அமைச்­ச­ரவை உப­கு­ழு­வொன்று ஜனா­தி­ப­தியால் நிய­மிக்­கப்­பட்­டி­ருந்­தது. அதில் நானும் நிய­மிக்­கப்­பட்­டி­ருந்தேன். எமது குழு­வா­னது ஆய்­வு­களை மேற்­கொண்டு அறிக்­கையை தயா­ரிக்கும் செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்­திருந்­தது. இந்­நி­லையில் நாளை செவ்­வாய்க்­கி­ழமை நாம் அறிக்­கையை ஜனா­தி­ப­தி­யி­டத்தில் கைய­ளிக்­க­வுள்ளோம்.

அறிக்­கையில் உள்ள விட­யங்­களை ஊட­கங்­க­ளி­டத்தில் பகி­ரங்­கப்­ப­டுத்த முடி­யாது. இருப்­பினும் இந்த பெற்றோல் நெருக்­கடி ஏற்­பட்டு குழப்­ப­மான சூழல் உரு­வாவ­தற்­கான நிலை­மைக்கு காரணம் என்­ன­வென்­பதைக் கண்­ட­றி­வதே எமது நோக்­க­மாகும். அது­ கு­றி­த்த விட­யங்கள் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளன. இதே­வேளை கடந்த காலத்தில் தரம் குறைந்த பெற்றோல் கொண்­டு­வந்­தமை தொடர்பாக நியமிக்கப்பட்ட குழு தொடர்பில் என்னால் பதிலளிக்க முடியாது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் காலத்திலேயே அந்த விடயம் நடந்தது. ஆகவே அவரே அதற்கு பதில ளிக்க வேண்டும் என்றார்

Leave a comment