முல்லைத்தீவில் அண்மைய நாட்களாக பெய்த கனமழை காரணமாக நந்திக்கடல் நீரேரி நீர்மட்டம் அதிகரித்ததன் காரணமாக வயல் நிலங்கள் பல நீரில் மூழ்கியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு நந்திக்கடல் கடலுடன் சங்கமிக்கும் பகுதியான வட்டுவாகல் முகத்துவார பகுதி கடலுடன் வெட்டி இணைக்கபட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபருடன் நேற்றையதினம் இந்த முகத்துவார பகுதியை கடலுடன் வெட்டி இணைப்பது தொடர்பாக கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது இதற்க்கு அமைவாகவே இன்றையதினம் குறித்த முகத்துவார பகுதி கடலுடன் வெட்டி இணைக்கபட்டுள்ளது.

