Breaking News
Home / முக்கிய செய்திகள் / இறுதி வரை­புக்­காக நீண்­ட­தூரம் பய­ணிக்க வேண்­டி­யுள்­ள­து-இரா.சம்­பந்தன்

இறுதி வரை­புக்­காக நீண்­ட­தூரம் பய­ணிக்க வேண்­டி­யுள்­ள­து-இரா.சம்­பந்தன்

தற்­போது புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான இடைக்­கால அறிக்­கையே வெளி­வந்­துள்­ளது. இதில் மாற்­றங்கள் நிகழ்­வ­தற்கு இட­முண்டு. ஆகவே இறுதி வரை­புக்­காக நீண்­ட­தூரம் பய­ணிக்க வேண்­டி­யுள்­ள­தாக தெரி­வித்த  எதிர்க்­கட்­சித்­த­லை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் தமிழ் மக்கள் ஏற்­காத எந்த விட­யத்­தி­னையும் தாமும் ஏற்­கப்­போ­வ­தில்லை எனவும் திட்­ட­வட்­ட­மாக அறி­வித்­துள்ளார்.

அதி­கா­ரப்­ப­கிர்வு என்­பது இனம்­சார்ந்த விடயம் அல்ல. அனைத்து தரப்­பி­ன­ருக்கும் அவ­சி­ய­மா­னது எனக்­கு­றிப்­பிட்ட சம்­பந்தன்  வட­கி­ழக்கு இணைப்பு விட­யத்தில் வாக்­கெ­டுப்பு நடத்­தப்­ப­டு­கின்­ற­போது முஸ்­லிம்­களின் நியா­ய­மான கோரிக்­கை­களை தமிழ் மக்கள் ஏற்­றுக்­கொண்டு தமிழ் பேசும் மக்­க­ளாக வாக்­க­ளிக்க வேண்டும் என்றும் கோரி­யுள்ளார்.

இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் மத்­திய செயற்­குழுக் கூட்டம் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை வவு­னி­யாவில் உள்ள வன்னி இன் விடு­தியில் முற்­பகல் 10 மணிக்கு ஆரம்­ப­மா­னது. இக் கூட்­டத்தில் இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் சிரேஷ்ட தலை­வரும் எதிர்க்கட்­சித்­த­லை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் விசேட உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில், நாட்டில் அர­சி­ய­ல­மைப்­புக்கள் உரு­வாக்­கப்­பட்­ட­போது தமிழ் மக்கள் அதில் பங்­கேற்­றி­ருக்­க­வில்லை. தமிழ் மக்கள் புறக்­க­ணிக்­கப்­பட்ட நிலை­யி­லேயே அர­சி­ய­ல­மைப்­புக்கள் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன. இவ்­வா­றான நிலையில் 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் இடம்­பெற்­ற­போது இரண்டு பிர­தான கட்­சி­களும் இணைந்து ஆட்­சியை அமைத்­துள்­ளன. இது­வொரு நல்ல சந்­தர்ப்­ப­மாகும். இவ்­வா­றான சந்­தர்ப்பம் கடந்த காலத்தில் ஏற்­பட்­டி­ருக்­க­வில்லை. அந்த சந்­தர்ப்­பத்­தினை நாம் நழுவவிடக்­கூ­டாது. சரி­யாக பயன்­ப­டுத்த வேண்டும். அதற்­கா­கவே நாம் புதிய அர­சி­ய­ல­மைப்பு பணி­க­ளுக்­கான செயற்­பா­டு­க­ளுக்கு ஆத­ர­வ­ளித்து வரு­கின்றோம்.

நாட்டின் உயர் நீதி­மன்­றத்தில் எமது கட்­சியின் கொள்­கை­களை காரணம் காட்டி வழக்கு தொட­ரப்­பட்­டி­ருந்­தது. சேனா­தி­ராஜா அப்­போது செய­லா­ள­ராக இருந்­த­மையால் அவ­ருக்கு எதி­ராக வழக்கை தொடர்ந்­தார்கள். அதில் தமி­ழ­ரசுக் கட்­சியின் சமஷ்டிக் கொள்கை நாட்டை பிரிப்­ப­தாக உள்­ளது. ஆகவே அதனை தடை­செய்ய வேண்டும் என்று  அறி­விக்க வேண்டும் என்று கூறி­னார்கள்.

ஆனால் அந்த வழக்கில் ஆஜ­ரான ஜனா­தி­பதி சட்­டத்­த­ர­ணி­க­ளான கன­க­ஈஸ்­வரன், சுமந்­திரன் ஆகியோர் சர்­வ­தே­ச­ நா­டு­களில் உள்ள சமஷ்டி வடி­வங்­களை உதா­ர­ண­மாகக் கூறி­னார்கள். பல்­வேறு வாதங்­களை முன்­வைத்­தார்கள். அதன் பிரகாரம் சமஷ்டி பிரி­வினை அல்ல என்று நீதி­ப­திகள் தீர்ப்பை அறி­வித்­தார்கள். இந்த தீர்ப்­பினை அறி­வித்­த­வர்கள் சிங்­கள நீதி­ப­திகள் என்­பதை கவ­னத்தில் கொள்ள வேண்டும். அதே­நேரம் நீதித்­து­றையின் சுயா­தீனம் தொடர்­பா­கவும் கவ­னத்தில் கொள்ள வேண்டும்.

தற்­போது வெளி­வந்­துள்ள புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான இடைக்­கால அறிக்­கையில் வார்த்­தை­களை மைய­மாக வைத்து விமர்­சனம் செய்­கின்­றார்கள். ஒரு­மித்த நாடு என்­பது நாடு ஒரு­மித்து, பிள­வு­ப­டா­தி­ருப்­ப­தையே குறிக்­கின்­றது. அது ஆட்சி முறை­மையைக் குறிக்­க­வில்லை. அதனை புரிந்து கொள்ள வேண்டும். எமது விட­யங்­களை நாமே கையா­ளக்­கூ­டிய வகையில் அதி­கா­ரங்கள் பகி­ரப்­பட வேண்டும் என்­ப­தையே கோரு­கின்றோம். வழங்­கப்­பட்ட அதி­கா­ரங்கள் மீளப்­பெ­றப்­பட்டு விடக்­கூ­டாது என்­பதில் உறு­தி­யாக இருக்க வேண்டும் என்­பதே எமது நிலைப்­பா­டு­மாகும்.  அந்த வகையில் இடைக்­கால அறிக்­கையில் அதி­கா­ரப்­ப­கிர்வு தொடர்­பாக விட­யங்கள் முன்­னேற்­ற­க­ர­மாக காணப்­ப­டு­கின்­றன.

அதி­கா­ரங்கள் பகி­ரப்­பட வேண்டும் என்­பது தனியே தமிழ் மக்கள் சார்ந்­த­வொரு விடயம் அல்ல. அதி­கா­ரங்­களை சிங்­கள மக்கள் உள்­ளிட்ட அனை­வரும் பயன்­ப­டுத்த வேண்டும். அந்த வகையில் மத்­திய அர­சாங்­கத்­தி­ட­மி­ருந்து அதி­கா­ரங்கள் பகி­ரப்­பட வேண்டும். ஆகவே அதி­கா­ரப்­ப­கிர்வு என்ற விட­யத்­தினை இன­ரீ­தி­யாக பார்க்க கூடாது. அது நாட்டின் அனைத்து மக்­க­ளுக்கும் உரி­யதா­ன­தொன்­றா­கவே பார்க்க வேண்டும். இந்த மன­நிலை அனைத்து மக்கள் தரப்­பி­ன­ரி­டத்­திலும் ஏற்­பட வேண்டும்.

அடுத்­த­தாக பௌத்த மதத்­திற்கு முத­லிடம் வழங்­கப்­பட்­டுள்­ளமை தொடர்­பாக கூறு­கின்­றார்கள். பெளத்த மதத்­திற்கு முத­லிடம் வழங்­கப்­பட்­டுள்­ள­மைக்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு எதிர்ப்பு தெரி­விக்­க­வில்லை என்று விமர்சிக்­கின்­றார்கள். இடைக்­கால அறிக்­கையில் பௌத்த மதத்­திற்கு முத­லிடம் வழங்­கப்­பட்­டுள்ள அதே­நேரம் ஏனைய மதங்­க­ளுக்கும் சமத்­துவம் அளிக்­கப்­பட வேண்டும் என்றே குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இதனால் ஏனைய மதங்­க­ளுக்­கு­மான உரிய இடம் அளிக்­கப்­பட்­டுள்­ளது.

அடுத்­த­தாக வடக்கு, கிழக்கு விடயம். இந்­திய – இலங்கை ஒப்­பந்­தத்தின் பிர­காரம் வடக்கு – கிழக்கு மாகா­ணங்கள் இணைந்து இருந்­தன. தொடர்ச்­சி­யாக 18 ஆண்­டு­க­ளாக இந்த மாகா­ணங்கள் இணைந்தே செயற்­பட்­டன. இருப்­பினும் நீதி­மன்­றத்தின் தீர்ப்பின் பிர­காரம் 18 ஆண்­டு­க­ளுக்கு பின்னர் இந்த இரண்டு மாகா­ணங்­களும் தனித்­த­னி­யாக்­கப்­பட்­டுள்­ளன என்­பதை வடக்கு, கிழக்கு தொடர்­பாக கருத்து வெளி­யி­டு­ப­வர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

வடக்கும் கிழக்கும் இணைக்­கப்­பட வேண்டும். அவ்­வாறு இணைக்­கப்­ப­டு­வ­தற்கு வடக்கு, கிழக்கில் ஒரு சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நடத்­தப்­பட வேண்டும். அவ்­வாறு சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நடத்­தப்­ப­டு­கின்ற போது சகோ­தர முஸ்லிம் சமூ­கத்­தினால் முன்­வைக்­கப்­படும் நியா­ய­மான கோரிக்­கையை தமிழ் மக்கள் ஏற்­றுக்­கொள்ள வேண்டும். அது கரை­யோர மாவட்­ட­மாக இருக்­கலாம். அல்­லது நிலத்­தொ­டர்­பற்ற தனி­ய­ல­காக  இருக்­கலாம். அவர்­களின்   நியா­ய­மான கோரிக்­கையை தமிழ் மக்கள் ஏற்­றுக்­கொள்ளும் அதே­நேரம் இரு­ ச­மூ­கங்­களும் தமிழ் பேசும் சமூகங்­க­ளாக ஒன்­று­பட்டு வாக்­க­ளிக்கும் கரு­மத்தில் பங்­கேற்க வேண்டும். தற்­போது இடைக்­கால அறிக்­கை­யொன்றே முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. அது தொடர்­பான விவா­தங்கள் அர­சி­ய­ல­மைப்பு சபை­யிலே நடை­பெற்று வரு­கின்­றன. இதில் சில பல மாற்­றங்கள் ஏற்­ப­டலாம். புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான இறுதி வரை­புக்­காக இன்னும் பய­ணிக்க வேண்­டி­யுள்­ளது. அவ்­வாறு இறுதி வரைபு செய்­யப்­பட்ட பின்னர் அந்த வரை­புடன் நாம் மக்­க­ளி­டத்தில் செல்வோம். மக்கள் அதனை ஏற்­க­வில்­லை­யென்றால் நாம் நிச்­ச­ய­மாக அதனை ஏற்­றுக்­கொள்ளமாட்டோம்.

ஆகவே தற்போது ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தினை குலைத்துவிடக்கூடாது. குழப்பி விடக்கூடாது. நாம் இறுதிவரையில் முயற்சிக்க வேண்டும். இந்த நல்ல சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி கருமங்களை துரிதமாக முன்னெடுக்க வேண்டியுள்ளது.

இடைக்­கால அறிக்கை தொடர்­பாக சிங்­கள மக்கள் மத்­தியில் கூட்டு எதிர்க்­கட்­சி­யினர் தவ­றான பரப்­பு­ரை­களைச் செய்­கின்­றார்கள். எமது தரப்பில் உள்­ள­வர்­களில் சிலர் இடைக்­கால அறிக்கை தொடர்பில் விளங்­கியும் விதண்­டா­வாதம் செய்­கின்­றார்கள். அதே­போன்று இன்னும் சிலர் இடைக்­கால அறிக்கை தொடர்­பாக விளங்­காது விதண்­டா­வாதம் செய்­கின்­றார்கள். இந்த சந்­தர்ப்­பத்­தினை குழப்­பாது அனை­வரும் ஒன்­றாக இக்­க­ரு­மங்­களை முன்னெடுக்க வேண்டியது அவசியம் என்றார்.

About அனு

மேலும்

முல்லைத்தீவு கடலில் கரை ஒதுங்கிய புலிக்கொடி

இன்றைய தினம் காலை குறித்த புலிக்கொடி கரை  ஒதுங்கியுள்ளது.இதனை தொடர்ந்து மீனவர்களால் பொலிஸாருக்கு வழங்கப்படட தகவலுக்கு அமைய புலிக்கொடி மீட்க்கப்பட்டு …