7 ஆண்­டு­க­ளுக்குள் 83 பேர் ஜனா­தி­பதி சட்­டத்­த­ர­ணிகள்

225 0

இலங்­கையில் கடந்த ஏழு ஆண்­டு­க­ளுக்குள் 83 பேர் ஜனா­தி­பதி சட்­டத்­த­ர­ணி­க­ளாக நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர். இவர்­களில் 11 பேர் சிறு­பான்­மை­யி­னத்­த­வர்­களை சேர்ந்­த­வர்­க­ளாவர் என தேசிய கொள்கை மற்றும் பொரு­ளா­தார அலு­வல்கள் அமைச்சு சபைக்கு தெரி­வித்­தது.

பாரா­ளு­மன்­றத்தில் சனிக்­கி­ழமை வாய்­மூல விடைக்­கான வினா நேரத்தின் போது மக்கள் விடு­தலை முன்­னணி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பிமல் ரத்­நா­யக்க எழுப்­பிய கேள்­விக்கு பதி­ல­ளித்து தேசிய கொள்கை மற்றும் பொருளா­தார அலு­வல்கள் அமைச்சு சபைக்கு ஆற்­றுப்­ப­டுத்­திய தக­வ­லி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

பிமல் ரத்­நா­யக்க எம்.பி. கேள்வி எழுப்பும் போது,

2010 ஆம் ஆண்டு தொடக்கம் 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரை ஜனா­தி­ப­தி­யினால் நிய­மிக்­கப்­பட்ட ஜனா­தி­பதி சட்­டத்­த­ர­ணிகள் பெயர் பட்­டியல் ஒவ்­வொரு வரு­டங்­க­ளு­க்கமைய வெவ்­வே­றாக சமர்ப்­பிக்கப்படுமா? ஜனா­தி­பதி சட்­டத்­த­ர­ணிகள் பெய­ரிடப்படும் போது பின்­பற்­றப்­படும் முறை­யியல் யாது என்றார்.

இந்த கேள்­விக்கு சபையில் ஆற்­றுப்­ப­டுத்­திய­ பதிலில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

இலங்கையில் கடந்த ஏழு ஆண்­டு­க­ளுக்குள் 83 பேர் ஜனா­தி­பதி சட்­டத்­த­ர­ணி­க­ளாக நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர். இதன்­படி 2010 ஆம் ஆண்டில் 12 பேரும், 2011 இல் 2 பேரும், 2012 இல் 24 பேரும்,2013 இல் 2 பேரும், 2014 இல் 8 பேரும்,2015 இல் 2 பேரும்,2016 இல் 5 பேரும், நடப்­பாண்டில் இது­வரை 28 பேரும் நிய­மனம் செய்­யப்­பட்­டுள்­ளனர். இவர்­களில் 11 பேர் சிறு­பான்­மை­யி­னத்­த­வர்­க­ளாவர். இந்த பட்­டி­யலில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான எம்.ஏ.சுமந்­திரன் மற்றும் அமைச்சர் பைசர் முஸ்­த­பாவும் உள்­ள­டங்­கு­கின்­றனர்.

Leave a comment