நல்லாட்சி அரசாங்கத்தின் உண்மையான தன்மை வெளிப்படுள்ளது – ஜே வி பி

Posted by - January 9, 2017

நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவுடன் அரசாங்கத்தின் உண்மையான தன்மை வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக ஜே வி பி தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போது ஜே வி பியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் இதனை குறிப்பிட்டார். மஹிந்த ஆட்சியில் இடம்பெற்ற ஒடுக்கு முறை மைத்திரி ரணில் ஆட்சியிலும் முன்னெடுக்கப்படுகின்றது. ஹம்பந்தோட்டை பிரதேசத்தில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் பொது மக்களின் காணிகளை கொள்ளையிடும் நடவடிக்கைகள்

விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப அதிகார சபை உருவாக்கப்படவுள்ளது.

Posted by - January 9, 2017

விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப அதிகார சபை ஒன்று உருவாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விஞ்ஞான, தொழிநுட்ப மற்றும் ஆராய்ச்சித்துறை அமைச்சர் சுசில் பிரேம ஜெயந்த இதனை தெரிவித்துள்ளார். நாட்டின் விஞ்ஞான தொழிநுட்பத் துறையை ஒருங்கிணைப்பு செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதற்கமைய 21 அமைச்சுக்கள் மற்றும் 80 ஆய்வு நிறுவனங்கள் அந்த அதிகாரசபைக்குள்ள ஒருங்கிணைக்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எதிர்ப்பு நியாயமான முறையில் இருக்க வேண்டும் – அரசாங்கம்

Posted by - January 9, 2017

நியாயமான முறையில் தமது எதிர்ப்புக்களை வெளிப்படுத்தாமல், ஒழுக்கயீனமான முறையில் எதிர்ப்புக்களை வெளிப்படுத்துகின்றவர்களுக்கு ஏற்றவகையில் பதில் வழங்க அரசாங்கம் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா இதனை தெரிவித்தார். சீன நிறுவனங்களால் முன்னெடுக்கப்படும் கைத்தொழில் வலய ஆரம்ப நிகழ்வில் பிரச்சினைகளை ஏற்படுத்தும் நோக்கில் முறையற்ற வகையில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. எதிர்ப்புக்களை வெளியிடுவதற்கு என சில ஒழுங்கு விதிகள் உள்ளன. எனினும் ஹம்பாந்N;தாட்டையில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் அந்த ஒழுங்குவிதிகளை மீறும் வகையில்

சதிகளால் இளைஞர்களும் யுவதிகளுமே பாதிக்கப்படுவார்கள் – பிரதமர்

Posted by - January 9, 2017

சதிகள் மூலம் இந்த நாட்டு இளைஞர்களும் யுவதிகளுமே பாதிக்கப்படுவார்கள் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த நிகழ்வின்போது தெரிவித்தார். இலங்கையில் தற்போது சுதந்திரம் உள்ளது. மக்கள் தமது கருத்துக்களை வெளியிடுவதற்கும் எதிர்ப்புக்களை வெளியிடுவதற்கும் உரிமை உள்ளது. மக்களின் கருத்துக்களின் அடிப்படையில் பிழைகளை திருத்திக்கொள்ள அரசாங்கம் தயாராக உள்ளது. எனினும் சிலர் நாட்டிற்கு கொண்டுவரப்படும் முதலீடுகளை தடுத்து நிறுத்த முயற்சிக்கின்றனர். இதன் மூலம் நாட்டின் இளைஞர் யுவதிகளுக்கு கிடைக்கும் தொழில் வாய்ப்புக்களே இல்லாது போவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க

நாட்டை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – ஜனாதிபதி

Posted by - January 9, 2017

நாட்டை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ‘பேண்தகு அபிவிருத்தியின் மூன்றாண்டு திட்டம்’ என்ற தொனிபொருளில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார். நாட்டையும் மக்களையும் வறுமையிலிருந்து விடுவிக்கும் காலத்தின் தேவையை நிறைவேற்றுவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். அத்துடன் அரசாங்கத்துடன் இணைந்து நாட்டைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுவது அனைவரினதும் பொறுப்பாகுமெனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சி சிவநகர் கிராம சனசமூக நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது(காணொளி)

Posted by - January 8, 2017

கிளிநொச்சி சிவநகர் கிராமத்திற்கான சனசமூக நிலையத்தை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு திறந்து வைத்தார். குறித்த சனசமூக நிலையம் ஏழு இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் நேற்றைய தினம் இரவு சிவநகர், கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் ஏற்பாட்டில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வருகைக்கு எதிராக, தமிழத்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் கரைச்சி பிரதேச சபை தவிசாளர் நா.வை.குகராசாவின் முழு நிதி பங்களிப்பில் அமைக்கப்பட்டு

புதிய அரசியலமைப்பின் ஊடாக தேசிய இனப் பிரச்சினைக்கு முழுமையான தீர்வு ஏற்பட வேண்டும்- எம்.ஏ.சுமந்திரன் (காணொளி)

Posted by - January 8, 2017

புதிய அரசியலமைப்பின் ஊடாக தேசிய இனப் பிரச்சினைக்கு முழுமையான தீர்வு ஏற்பட வேண்டும் என்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகவும் உறுதியாக இருப்பதாக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கொழும்பில் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பு சட்ட உருவாக்கம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கலந்துரையாடல்

Posted by - January 8, 2017

அரசியலமைப்பு சட்ட உருவாக்கம் தொடர்பில் இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் லொன்றை நடாத்தியுள்ளனர். கொழும்பிலுள்ள எதிர்த்தலைவர் அலுவலகத்தில் இன்று காலை முதல் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தி, அனைத்து பாராளுமன்ற இந்த கலந்துரையாடலில் கலந்துக்கொண்டிருந்ததாக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.    

நுவரெலியா ஹட்டன் ஹோல்புறுக் ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்திற்கு செல்லும் பிரதான வீதி திறந்து வைக்கப்பட்டது(காணொளி)

Posted by - January 8, 2017

  நுவரெலியா ஹட்டன் ஹோல்புறுக் ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்திற்கு செல்லும் பிரதான வீதியை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.பி.சக்திவேல் இன்று காலை திறந்து வைத்தார். ஹோல்புறுக் நகரில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்திற்கு செல்லும் பிரதான வீதி குன்றும் குழியுமாக காணப்பட்ட நிலையில், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.பி.சக்திவேலின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி மூலம் குறித்த வீதி புனரமைக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து அவ்வீதி மாகாண சபை உறுப்பினர் ஏ.பி.சக்திவேலினால் வைபவ

கொட்டகலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் கையளிக்கப்பட்டன (காணொளி)

Posted by - January 8, 2017

நுவரெலியா கொட்டகலையில் பசும்பொன் வீடமைத்திட்டத்தின் கீழ் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் கையளிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாகப் பதவியேற்று 2ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு, மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் மூலமாக “பசும் பொன்” வீடமைப்பு திட்டத்தின் கீழ், நுவரெலியா கொட்டகலை கிறிஸ்லஸ்பாம் தோட்டத்தில் வீடுகள் அமைக்கப்பட்டு வந்தன. இதற்கமைய புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 20 வீடுகளைக் கையளிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. இந்நிகழ்வு மலைநாட்டு புதிய