வருடத்திற்கு மூன்று முறை வாக்காளர் பெயர் பட்டியல் பதிவு – மகிந்த தேசப்பிரிய

Posted by - January 15, 2017

வருடத்திற்கு மூன்று முறை இளைஞர் யுவதிகளின் பெயரை, வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யும் முழுமையான வாக்காளர் பட்டியல் ஒன்றை தயார் செய்வதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 18 வயதை பூர்த்தி செய்த இளைஞர் யுவதிகளுக்கு வாக்களிக்கும் உரிமையினை பெற்றுக்கொடுப்பதே இதன் நோக்கம் என அவர் குறிப்பிட்டார். வவுனியா இளைஞர் அமைப்பு ஒன்று, மனித உரிமை ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்த முறைப்பாடு மற்றும் தேசிய இளைஞர் சேவை சபைக்கு கிடைத்த மனுக்கள் தொடர்பில் அவர் கருத்து

அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்கட்சி போராட்டம்

Posted by - January 15, 2017

உள்ளுராட்சி மன்ற தேர்தல் பிற்போடப்படுதல் மற்றும் வாழ்க்கை செலவீனம் அதிகரிப்பதற்கு எதிராகவும், ஒன்றிணைந்த எதிர்கட்சி ஏதிர்பாட்டம் இன்று எஹலியகொடவில் இடம்பெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர்களான வாசுதேவ நாணயகார மற்றும் ஜனாக வக்கும்பர ஆகியோரின் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. மக்கள் அரசாங்கத்துடன் மோத தயார் என வாசுதேவ நாணயகார குறிப்பிட்டார். நாங்கள் இன்று வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் மேற்கொள்வது அரசாங்கத்திற்கு எதிராக மக்களின் கருத்தை வெளிப்படுத்தவே என அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று வாழ்க்கை செலவீனம் தாங்கிக்கொள்ள முடியாத அளவு

ஆமை இறைச்சி கைப்பற்றல்

Posted by - January 15, 2017

வென்னப்புவ – நயினமடுவ கடல் பகுதியில் சுமார் 50 கிலோகிராம் ஆமை இறைச்சியுடன் படகு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. கடல் பாதுகாப்பு திணைக்களத்தின் அதிகாரரிகளால் இந்த படகு கைப்பற்றப்பட்டுள்ளது. இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது படகில் இருந்த மூன்று பேர் தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தல் மே மாதத்தில் நடக்கலாம்

Posted by - January 15, 2017

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை எதிர்வரும் மே மாதத்துக்கு முன்னர் நடத்தலாம் என்று தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அடுத்த தைப்பொங்கலுக்குள் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு..!

Posted by - January 15, 2017

நாட்டில் தற்போது நிலவும் அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் அடுத்த 2018 ஆம் ஆண்டு காலப்பகுதிகுள் தீர்வு கிடைக்கும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தின தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கின் அனைத்து விஹாரைகளுக்கும் இராணுவப் பாதுகாப்பு

Posted by - January 15, 2017

வடக்கு கிழக்கு மாகாணங்களின் அனைத்து விஹாரைகளுக்கும் இராணுவப் பாதுகாப்பு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

உள்ளுராட்சி தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி விரைவில் முக்கியஅறிவிப்பை வெளியிடும்

Posted by - January 15, 2017

உள்ளுராட்சி தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி விரைவில் முக்கியஅறிவிப்பை வெளியிடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மைத்திரிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய ஊடகம்!

Posted by - January 15, 2017

ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் இலங்கைக்கு ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை வழங்குவதற்கு தீர்மானித்ததனை தொடர்ந்து அரசாங்கத்திற்கும் கிடைக்கும் கௌரவம் மற்றும் புகழை தடுப்பதற்கு சிலர் நடவடிக்கை மேற்கொள்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பிள்ளையான் உள்ளே இருக்கவேண்டியவர் அல்ல – மாளிகாவத்தை போதிராஜராமய விகாராதிபதி

Posted by - January 15, 2017

மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தற்பேதைய கிழக்குமாகாண சபை உறுப்பினருமான பிள்ளையான எனப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனை மாளிகாவத்தை ஸ்ரீ போதிராஜராமய விகாராதிபதியும் போதிராஜராமய கல்வி கலாசார மன்றத்தின் தலைவருமான உவதென்னே சுமணதேரோ பார்வையிட்டார். சிறைச்சாலைக்கு இன்று காலை விஜயம் செய்த தேரர் பிள்ளையானுடன் சில மணிநேரம் பேசினார். தைப்பொங்கலையொட்டியே பிள்ளையானைப் பார்வையிட்டோம். அவரது நலன்கள் குறித்து கேட்டறிந்து கொண்டோம். பிள்ளையான் ஒரு சாதாரண மனிதர் அல்ல அவர் ஒரு முன்னாள் முதலமைச்சர்.