அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்கட்சி போராட்டம்

225 0

1456566419_th1உள்ளுராட்சி மன்ற தேர்தல் பிற்போடப்படுதல் மற்றும் வாழ்க்கை செலவீனம் அதிகரிப்பதற்கு எதிராகவும், ஒன்றிணைந்த எதிர்கட்சி ஏதிர்பாட்டம் இன்று எஹலியகொடவில் இடம்பெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினர்களான வாசுதேவ நாணயகார மற்றும் ஜனாக வக்கும்பர ஆகியோரின் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

மக்கள் அரசாங்கத்துடன் மோத தயார் என வாசுதேவ நாணயகார குறிப்பிட்டார்.

நாங்கள் இன்று வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் மேற்கொள்வது அரசாங்கத்திற்கு எதிராக மக்களின் கருத்தை வெளிப்படுத்தவே என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று வாழ்க்கை செலவீனம் தாங்கிக்கொள்ள முடியாத அளவு உயர்வடைந்துள்ளது.

50 ரூபாவிற்கு விற்கப்பட்ட அரிசி இன்று 85, 90 ரூபாவிற்கு விற்கப்படுகின்றன.

மக்கள் இவற்றிற்கு எதிராக அரசாங்கத்துடன் மோத தயாராகியுள்ளனர்.

அதன் முதல்படியாகவே இன்றைய ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதாகவும் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டார்.