வருடத்திற்கு மூன்று முறை வாக்காளர் பெயர் பட்டியல் பதிவு – மகிந்த தேசப்பிரிய

224 0

30711வருடத்திற்கு மூன்று முறை இளைஞர் யுவதிகளின் பெயரை, வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யும் முழுமையான வாக்காளர் பட்டியல் ஒன்றை தயார் செய்வதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

18 வயதை பூர்த்தி செய்த இளைஞர் யுவதிகளுக்கு வாக்களிக்கும் உரிமையினை பெற்றுக்கொடுப்பதே இதன் நோக்கம் என அவர் குறிப்பிட்டார்.

வவுனியா இளைஞர் அமைப்பு ஒன்று, மனித உரிமை ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்த முறைப்பாடு மற்றும் தேசிய இளைஞர் சேவை சபைக்கு கிடைத்த மனுக்கள் தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில் இதனை தெரிவித்தார்.

ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் முதலாம் திகதியும், 18 வயதை பூர்த்தி செய்யும் இளைஞர் யுவதிகள் வாக்காகளர் பட்டியலில் இணைக்கப்படுவார்கள்.

அத்துடன் ஜனவரி 31ஆம் திகதி மற்றும் செப்டம்பர் 30ஆம் திகதியாகும் போதும் 18 வயதை பூர்த்தி செய்வர்வகளும் வாக்காளர் பட்டியலில் இணைக்கப்படுவர்.

தற்போதைய முறையின் படி தேர்தல் ஒன்று இடம்பெறும் போது, சில சந்தப்பங்களில் 19 வயதை பூர்த்தி செய்த ஒருவருக்கும் வாக்களிக்க முடியாத நிலை ஏற்படும்.

இந்த புதிய முறைமைக்கு அரசியல் கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும், குறித்த பிரேரணை தயார் செய்யப்பட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.