மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தற்பேதைய கிழக்குமாகாண சபை உறுப்பினருமான பிள்ளையான எனப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனை மாளிகாவத்தை ஸ்ரீ போதிராஜராமய விகாராதிபதியும் போதிராஜராமய கல்வி கலாசார மன்றத்தின் தலைவருமான உவதென்னே சுமணதேரோ பார்வையிட்டார்.
சிறைச்சாலைக்கு இன்று காலை விஜயம் செய்த தேரர் பிள்ளையானுடன் சில மணிநேரம் பேசினார்.
தைப்பொங்கலையொட்டியே பிள்ளையானைப் பார்வையிட்டோம்.
அவரது நலன்கள் குறித்து கேட்டறிந்து கொண்டோம். பிள்ளையான் ஒரு சாதாரண மனிதர் அல்ல அவர் ஒரு முன்னாள் முதலமைச்சர்.
அவர் உள்ளே இருக்கவேண்டியவர் அல்ல.
அவர் வெளியே இருந்து நிறைய பணிகளை மக்களுக்காக செய்யவேண்டியவர்.
சமாதானத்தையும் ஒற்றுமையையும் கிழக்கிலிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும்.
இங்குதான் மூன்று சமுகங்களும் நிம்மதியாக வாழ்கின்றன.
அத்தைகைய சமாதான முன்னெடுப்புகளுக்கெல்லாம் பிள்ளையான் போன்றவர்கள் தேவைப்படுகின்றனர் எனவும் குறிப்பிட்டார்.


