வவுனியாவில், பாராளுமன்ற உறுப்பினர் சிவகச்தி ஆனந்தனுக்கும், பொது அமைப்புகளின் பிரதிநிதிகளுக்குமிடையில் கலந்துரையாடல் (காணொளி)

Posted by - January 15, 2017

  வவுனியாவில், பாராளுமன்ற உறுப்பினர் சிவகச்தி ஆனந்தனுக்கும், பொது அமைப்புகளின் பிரதிநிதிகளுக்குமிடையில் இன்று கலந்துரையாடலொன்று நடைபெற்றது. வவுனியா நயினாமடு பொது நோக்கு மண்டபத்தில் இ;டம்பெற்ற இக் கலந்துரையாடலில், மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், தற்கால அரசியல் நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக வறட்சி மற்றும் நீர்பிரச்சனை, விவசாயத்திற்கான நஸ்டஈடு தொடர்பாகவும், இதன்போது பொது மக்களால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. குறித்த நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடக்கு மாகாணசபை உறுப்பினர் ஆர்.இந்திரராசா, எம். தியாகராசா உட்பட

2017ஆம் ஆண்டு சுய கௌரத்தையும், தன்மானத்தையும் காக்க வழி பிறக்கும். யாரும் கவலைப்பட வேண்டாம்- தொண்டமான் (காணொளி)

Posted by - January 15, 2017

  இந்திய அரசாங்கத்தின் ஊடாக மலையக மக்களின் அபிவிருத்திக்கு உதவிகளை பெற்றுக்கொள்ளும் முகமாக, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கும் என்று, நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார். தலவாக்கலையில் நடைபெற்ற மத்திய மாகாண தைப்பொங்கல் நிகழ்வில் உரைநிகழ்த்தும்போதே, ஆறுமுகன் தொண்டமான் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து குறித்த நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான்…., இன்றைய நிகழ்வின்போது கலந்து கொண்ட மத்திய மாகாண முதலமைச்சரின் உதவியைக்கொண்டு

இந்தியாவிலிருந்து கலை, கலாசாரத்தை கொண்டு வந்த நாம் இலங்கையிலும் கலாசார விழுமியங்களை பாதுகாக்க வேண்டும்- முத்து சிவலிங்கம் (காணொளி)

Posted by - January 15, 2017

இந்தியாவிலிருந்து மொழி, கலை, கலாசாரம் ஆகியவற்றைக் கொண்டு வந்த இந்திய வம்சாவளி மக்கள் மலையகத்தில் வாழும் நிலையில், யார் எதைச் சொன்னாலும் தமது கலை, கலாசாரத்தை ஒழித்து விட முடியாது என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான முத்து சிவலிங்கம் தெரிவித்தார். தலவாக்கலையில் நடைபெற்ற மத்திய மாகாண தைப்பொங்கல் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையில் முத்து சிவலிங்கம் இவ்வாறு தெரிவித்தார். நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர்

பொங்கல் விழா யேர்மனி 14.1.2017

Posted by - January 15, 2017

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு யேர்மனிக் கிளையினால் பொங்கல் விழா யேர்மனி டுசில்டோர்ப் நகரில் மிகவும் சிறப்பாக நடாத்தப்பட்டது. தமிழீழத் தேசியக் கொடி ஏற்றப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட பொங்கல் நிகழ்வில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளர்களும் அதன் துணையமைப்புக்களின் செயற்பாட்டாளர்களும் பொதுமக்களும் இணைந்திருந்தனர். அத்தோடு சிறப்பான மேடை நிகழ்வுகளும் நடைபெற்றதை மண்டபம் நிறைந்த மக்கள் கூடியிருந்து கொண்டாடினர்.

10,000 பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு – தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு

Posted by - January 15, 2017

எதிர்காலத்தில் நாட்டில் செய்யப்படும் முதலீடுகள் ஊடாக உருவாகும் தொழில் வாய்ப்புகளுக்கு பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் நிரோஸன் பெரேரா தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் துப்பாக்கி, கைக்குண்டுடன் கணவன் மனைவி கைது!

Posted by - January 15, 2017

வவுனியாவில் கைக்குண்டு மற்றும் இடியன் துப்பாக்கியுடன் காட்டில் வாழ்ந்துவந்த கணவன் மனைவியை ஓமந்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தோல்விக்கு அஞ்சியே உள்ளூராட்சித் தேர்தல் இழுத்தடிக்கப்படுகிறது!

Posted by - January 15, 2017

மஹிந்த ராஜபக்ஷ அணி பலம் பெற்றுள்ள நிலையில் தமது கட்சி படுதோல்வியடைந்து விடும் என்கின்ற அச்சம் காரணமாகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த ஒரு வருட காலமாக உள்ளூராட்சித் தேர்தலை நடத்தாமல், இழுத்தடித்து வருகின்றது என உலமாக் கட்சித் தலைவர் அஷ்ஷெய்க் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.

உயர்தரப் பரீட்சையில் 6468 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் ஏ சித்தி!

Posted by - January 15, 2017

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் 6468 பாடசாலை பரீட்சார்த்திகள் மூன்று பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுக்கொண்டுள்ளனர்.

பாரிய நெருக்கடியில் நிதி மோசடி விசாரணை பிரிவு!

Posted by - January 15, 2017

பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் மொனராகலைக்கு மாற்றி அனுப்பப்பட்டுள்ளமையினால் அந்த பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.

தென்மராட்சி மட்டுவில் வீதியில் விபத்து ஒருவர் பலி (காணொளி)

Posted by - January 15, 2017

யாழ்ப்பாணம் தென்மராட்சி மட்டுவில் வீதியில் இன்று மதியம் ஏற்பட்ட விபத்து சம்பவமொன்றில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் புத்துர் கிழக்கு ஊறணியைச் சேர்ந்த 25 வயதுடைய செல்லமுத்து சுரேஷ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். புத்துர் மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் கோவில் வீதியினூடாக உந்துருளியில் பயணித்துக் கொண்டிருந்த இரு இளைஞர்கள் வீதிச்சமிக்ஞை கம்பத்துடன் மோதி வாய்க்காலுக்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளர். விபத்தின் போது காயமடைந்தவர்களை வைத்தியாலைக்கு கெண்டு சென்ற வேளை ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி