தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் இணைந்து, அதிகாரப் பகிர்வை பெறவேண்டிய தேவையுள்ளது- நஸீர் அஹமட் (காணொளி)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் இணைந்து, அதிகாரப் பகிர்வை பெறவேண்டிய தேவையுள்ளதாக, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார். ஜனாதிபதியின் மட்டக்களப்பிற்கான விஜயம் தொடர்பில், காத்தான்குடியில் நடைபெற்ற கலந்துரையாடலில் கருத்துத் தெரிவிக்கும்போதே, கிழக்கு மாகாண முதலமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். தமிழ், முஸ்லிம் மக்கள் சரியான புரிந்துணர்வுடன் ஒவ்வொரு சமூகத்தினுடைய கௌரவமும் அந்தஸ்தும் பாதிக்காத வகையில் பிரச்சினைகளை பேசித்தீர்ப்பதன் மூலமாக மாத்திரமேதான், உண்மையான நிரந்தரமான தீர்வை தாங்கள் அடையமுடியும் எனவும் அவர் நம்பிக்கை

