சிவநகர் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை அதிபரின் இடமாற்றத்திற்கு எதிராக மாணவர்களும், பெற்றோர்களும் இன்று ஆர்ப்பாட்டம் (காணொளி)

281 0

 

sivanagarகிளிநொச்சி சிவநகர் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை அதிபரின் இடமாற்றத்திற்கு எதிராக மாணவர்களும், பெற்றோர்களும் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிளிநொச்சி சிவகநகர் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையின் அதிபரின் இடமாற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு கோரியும், குறித்த பாடசாலையின் பெற்றோர்களும், மாணவர்களும் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கணிதம், விஞ்ஞானம், நடனம், உடற்கல்வி ஆசிரியர்கள் இடமாற்றம் பெற்றுச் சென்று ஆறுமாதங்கள் கடந்த போதிலும், இதுவரை அந்த வெற்றிடங்கள் நிரப்படவில்லை என்றும், இந்நிலையில் அதிபருக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமை தங்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்துகிறது எனவும் சுட்டிக்காட்டியுள்ள பெற்றோர்கள், இத்தகைய செயற்பாடானது முன்னேற்றமடைந்து செல்லும் தங்கள் பிரதேசத்தின் கல்வி வளர்ச்சியில் மீண்டும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளனர்.

எனவே பற்றாக்குறையாக உள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பிவிட்டு அதிபரை இடமாற்றம் செய்யுங்கள் எனக்  கோரிக்கை விடுத்த பெற்றோர்கள், தற்போதைய ஆசிரியர் வெற்றிடத்தை நிரப்பும் வரை அதிபரை இடமாற்றம் செய்யவேண்டாம் என்றும், தொடர் ஆசிரிய இடமாற்றத்தினால் மாணவர்களின் கல்விநிலை தொடர்ந்து பாதிக்கப்படுவதாகவும் கவலை வெளியிட்டுள்ளனர்.