கிளிநொச்சியில் கசிப்பு மீட்பு

Posted by - January 17, 2017

கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிவுக்குட்பட்ட தருமபுரம் பொலிஸ் நிலையப் பிரிவில் உள்ள தருமபுரம் 08,ஆம் யூனிற் கிராமத்தின் காட்டுப்பகுதியில் சட்ட விரோதமா இயங்கிய கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைக்கப்பட்டு கசிப்புக் கோடா 252, லீற்றரும், கசிப்பு 41, லீற்றர்  ஆகியவற்றுடன் கசிப்புக் காச்சுவதற்குப் பயன்படுத்திய உபகரணங்கள் கைப்பற்றப்பட்டதுடன், சம்பவ இடத்தில் வைத்து சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்ததுடன் கசிப்பு உற்பத்தி நிலையமும் நிர்மூலமாக்கப் பட்டுள்ளதாக தருமபுரம் பொலிஸ் நிலைய தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்று

தமிழக மக்களின் உணர்வுகளுடன் இணைந்திருக்கிறோம். – ரவிகரன்

Posted by - January 17, 2017

தமிழர் மரபு விளையாட்டான ஏறுதழுவுதலுக்கான தடையை நீக்கக்கோரி போராடிக்கொண்டிருக்கின்ற தமிழக மக்களின் உணர்வுகளுடன் இணைந்திருக்கிறோம் என வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். தமிழர் மரபைக்காப்பதற்காக தன்னலமற்று எழுச்சிகொண்டுள்ள தமிழ் இளையோரின் போராட்டத்தை உள்ளன்போடு வாழ்த்துவதாகவும் தெரிவித்தார். மக்கள் நலனுக்காக கண்ணியத்துடன் போராடுவதில் தமிழர்களுக்கு நிகர் தமிழர்களே. தமிழக வரலாற்றில் பல சந்தர்ப்பங்களில் போராட்டங்கள் மூலம் நீதியை நிலைநிறுத்தியவர்கள் என்கின்ற அடையாளம் தமிழக இளையோருக்கு உண்டு. 2013இல் ஈழத்தமிழர்களுக்காக அவர்கள் கொதித்தெழுந்ததை எம் வரலாறு மறவாது. இன்று

கொக்காகோலா உற்பத்தியின் மத்திய நிலையமாக மாறும் இலங்கை!

Posted by - January 17, 2017

கொக்காகோலா உற்பத்தியின் பிரதான மத்திய நிலையமாக இலங்கையை மாற்றி அமைக்கவுள்ளதாக கொக்காகோலா உற்பத்தி நிறுவனத்தின் ஆசிய பசுபிக் வலயத்திற்கான தலைவர்கள் தெரிவித்துள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க கூறியுள்ளார்.

கோத்தபாயவுக்கு அவுஸ்திரேலியாவில் நெருக்கடி!

Posted by - January 17, 2017

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலைக்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ பொறுப்புக் கூற வேண்டும் என அவுஸ்திரேலியாவில் உள்ள லசந்த விக்ரமதுங்கவின் மகள் வாக்குமூலமளித்துள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் மூத்த விமானப்படை அதிகாரி கைது!

Posted by - January 17, 2017

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பெறுமதியான வெளிநாட்டு மதுபான போத்தல்களை கொண்டு செல்ல முயற்சித்த குற்றச்சாட்டிற்காக இலங்கை விமானப்படையின் மூத்த அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வடமாகாணத்தில் இருந்து பணம் திரும்பி செல்கின்றது!

Posted by - January 17, 2017

அரசியல்வாதிகளின் பிரச்சினைகளால் வடமாகாணத்தில் இருந்து பணம் திரும்புகின்றது என வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

சுவீடன் வெளிவிவகார அமைச்சரை சந்தித்தார் மங்கள

Posted by - January 17, 2017

சுவீடன் நாட்டு வெளிவிவகார அமைச்சர் மார்கொட் வால்ஸ்ட்ரோம், இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை இன்றைய தினம் சந்தித்துள்ளார்.

தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து செங்காளன் மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் தமிழர் திருநாள்

Posted by - January 17, 2017

திருவள்ளுவர் ஆண்டு 2048 தைத்திங்கள் முதலாம் நாள் (14.01.2017) சனிக்கிழமையன்று செங்காளன் மாநிலத் தமிழ்ப்பள்ளிகள் இணைந்த வகையில் தமிழர் திருநாளை மிகவும் சிறப்பாகக் கொண்டாடினர். மங்கள விளக்கேற்றலுடன் இந்நிகழ்வு ஆரம்பமாகியது. வெண்பனி பொழிகின்ற சுவிஸ் நாட்டின் வாழிடச் சூழலுக்கு ஏற்றதாக தாயகத்தின் தைப்பொங்கலை அப்படியே நினைவுபடுத்தும் வகையில் ஆண்டு 11 மாணவர்களால் பொங்கல் பொங்கி பொங்கலோடு முக்கனிகளும் சேர்த்துக் கதிரவனுக்குப் படைக்கப்பட்ட காட்சி தமிழர் திருநாளின் நினைவகலாப் பதிவாகும். தொடர்ந்துஇ மாணவர்களால் தமிழர்களின் கிராமியக் கலைவடிவங்களான காவடி

லோதா குழுவின் பரிந்துரை அமுலாக்கம் குறித்து ஆராயும் குழு நாளை கூடுகிறது

Posted by - January 17, 2017

இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபைக்கு லோதா குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளின் அமுலாக்கம் சம்மந்தமான கண்காணிப்புக் குழு நாளை நியமிக்கப்படவுள்ளது. இந்திய உயர் நீதிமன்றம் இந்த குழுவை நியமிக்கவுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த பரிந்துரைகளை அமுலாக்க தவறியமைக்காக கிரிக்கட் கட்டுப்பாட்;டு சபையின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோரை உயர் நீதிமன்றம் பதவி நீக்கியிருந்தது. இதன்படி தற்போது பரிந்துரைகளின் அமுலாக்க நிலைமைகள் தொடர்பில் கண்காணிக்க இந்த குழு நியமிக்கப்படவுள்ளது. இதேவேளை பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள கிரிக்கட் சபையின் தலைவர்

ஏமனில் 10 மில்லியன் மக்களுக்கு அவசர உதவி தேவை

Posted by - January 17, 2017

ஏமனில் கடந்த 2 ஆண்டுகளாக இடம்பெற்ற மோதல்கள் 10 ஆயிரம் பேர்வரை பலியாகியுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ஏமனில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான உதவிகள் அலுவலகம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. குறித்த மோதலில் 40 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர். இதேவேளை, 10 மில்லியன் மக்களுக்கு ஏமனில் அவசர உதவிகள் தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான உதவிகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.