சுவீடன் வெளிவிவகார அமைச்சரை சந்தித்தார் மங்கள

266 0

521206872mangalaaசுவீடன் நாட்டு வெளிவிவகார அமைச்சர் மார்கொட் வால்ஸ்ட்ரோம், இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை இன்றைய தினம் சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது இலங்கையின் நல்லிணக்கம்,பிராந்திய பிரச்சினைகள் மற்றும் இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் ஆராயப்பட்டதாக சுவீடன் நாட்டு வெளிவிவகார அமைச்சர் மார்கொட் வால்ஸ்ட்ரோம் தெரிவித்துள்ளார்.

குறித்த தகவலை சுவீடன் நாட்டு வெளிவிவகார அமைச்சர் மார்கொட் வால்ஸ்ட்ரோம்,தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் கணக்கில் பதிவேற்றம் செய்துள்ளார்.

சுவீடன் நாட்டின் வெளிவிவகார அமைச்சின் அழைப்பின் பேரில்,வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இன்றைய தினம் சுவீடன் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.