ஏமனில் 10 மில்லியன் மக்களுக்கு அவசர உதவி தேவை

264 0

Nepalese volunteers unload relief material brought in an Indian air force helicopter for victims of Saturdayís earthquake at Trishuli Bazar in Nepal, Monday, April 27, 2015. The death toll from Nepal's earthquake is expected to rise depended largely on the condition of vulnerable mountain villages that rescue workers were still struggling to reach two days after the disaster.  (AP Photo/Altaf Qadri)

ஏமனில் கடந்த 2 ஆண்டுகளாக இடம்பெற்ற மோதல்கள் 10 ஆயிரம் பேர்வரை பலியாகியுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

ஏமனில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான உதவிகள் அலுவலகம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

குறித்த மோதலில் 40 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர்.

இதேவேளை, 10 மில்லியன் மக்களுக்கு ஏமனில் அவசர உதவிகள் தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான உதவிகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.