உள்ளாடையும் சுத்தம் என்பதை இம்முறை நிரூபிப்போம்- லக்ஷ்மன் யாபா

Posted by - December 27, 2017

இம்மாதம் 28 ஆம் திகதி முதல் அடுத்த மாதம் 10 ஆம் திகதி வரையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் எதிர்பாராத சிலர் இணைந்துகொள்ளவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லக்ஷமன் யாபா அபேவர்தன தெரிவித்தார். இக்காலப் பிரிவில் பெரும்பாலான அரசியல்வாதிகள், தொழிற்சங்கங்களின் தலைவர்கள் உட்பட பலர் தம்முடன் இணைந்துகொள்ளவுள்ளதாகவும் அவர் கூறினார். நாம் துப்பறவான ஆடை அணிந்திருப்பது போலவே உள்ளாடையும் சுத்தமாகவே அணிந்துள்ளோம் என்பதை இம்முறை நிரூபித்துக் காட்டுவோம் எனவும் இராஜாங்கா அமைச்சர் மேலும் கூறினார்.

ரஜரட்ட பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு.!

Posted by - December 27, 2017

காய்ச்சல் பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த ரஜரட்ட பல்கலைக்கழகம் , இன்று முதல் மீண்டும் தமது கல்விச் செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளது. பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் கலாநிதி ரஞ்ஜித் விஜேவர்தன இதனைத் தெரிவித்துள்ளார். மாணவர்களுக்கு இடையே ஒருவகை வைரஸ் காய்ச்சல் பரவியதன் காரணமாக, கடந்த 19ம் திகதி ரஜரட்ட பல்கலைக்கழகம் மூடப்பட்டிருந்தது. இன்று முதல் மீண்டும் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

தபால் மூலமான வாக்களிப்பு பெறுபேறு தனியாக வெளியிடப்படமாட்டாது-மஹிந்த தேசப்பிரிய

Posted by - December 27, 2017

எதிர்வரும் உள்ளுராட்சிமன்ற தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க 5 இலட்சம் பேர் விண்ணப்பித்திருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். தபால் மூலமான வாக்களிப்பு ஜனவரி 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது இம்முறை உள்ளுராட்சிமன்ற தபால் மூலமான வாக்களிப்பு பெறுபேறுகள் தனியாக வெளியிடப்படமாட்டாது எனவும், ஏனைய வாக்குகளுடன் ஒன்று சேர்க்கப்பட்டு வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார். தபால் மூலமான வாக்களிப்பு இடம்பெற்ற பின்னர் அந்த வாக்குகள் உள்ளுராட்சி மன்றத்திற்காக

பழைய தகறாறு காரணமாக நபரொருவர் மீது அசீட் வீசிய அண்ணன், தம்பி

Posted by - December 27, 2017

இரு சகோதரர்களினால் மேற்கொள்ளப்பட்ட அசீட் வீச்சினால் காயமடைந்த ஒருவர் மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். மேலும், சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் லுணுவில – துலாவ பகுதியைச் சேர்ந்த ஒருவர் எனத் தெரியவந்துள்ளது. நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் வந்த குறித்த சகோதரர்கள் அசிட் தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. பழைய தகறாறு ஒன்றே இதற்குக் காரணம் என பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர். இதேவேளை,

ஹெரோயின் வைத்திருந்த தம்பதி உள்ளிட்ட மூவர் கைது

Posted by - December 27, 2017

இராஜகிரிய பகுதியில் ஹெரோயின் வைத்திருந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் வசம் இருந்து 4 கிராம் 150 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், சந்தேகநபர் பொரளை பகுதியைச் சேர்ந்த 41 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது. இன்று அவரை புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை, ஹெரோயினை தன்னகத்தே வைத்திருந்த கணவனும் மனைவியும் மாத்தளை பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது, மனைவியின்

மட்டில் இளைஞரை கத்தியால் குத்தி கொலை

Posted by - December 27, 2017

மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி – பெரியகல்லாறு பகுதியில் உள்ள தேவாலய வளாகத்திற்குள் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று மாலை 07.00 மணியளவில் பெரியகல்லாறு ஊர் வீதியில் உள்ள புனித அருளானந்தர் தேவாலயத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கமே கத்திக்குத்துக்கு காரணம் என, களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது, பெரியகல்லாறு முதலாம் குறிச்சி பிரதான வீதியை சேர்ந்த ஜேசுதாசன் திமேசன் (23) என்னும் இளைஞரே உயிரிழந்துள்ளார். மேலும், சந்தேகநபரும் அவரது

தபால் ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம்

Posted by - December 27, 2017

தபால் திணைக்களத்தின் அனைத்து தொழிற்சங்கங்களும் இன்று நண்பகல் அளவில், நாட்டின் சில பிரதேசங்களில் வேலை நிறுத்தத்தை மேற்கொள்ளவுள்ளதாக, தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, பொலன்னறுவை, அனுராதபுரம், கண்டி, மாத்தளை, கேகாலை, குருநாகல், கம்பஹா, காலி, பதுளை, ஆகிய பகுதிகளிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக, ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க ஒன்றியத்தின் இணை அமைப்பாளர் எச்.கே.காரியவசம் குறிப்பிட்டுள்ளார். தற்போது வரை தபால் திணைக்களத்திலுள்ள பல பிரச்சினைகள் தீர்க்கப்படாதுள்ளமையே இதற்குக் காரணம் எனவும் அவர் கூறியுள்ளார்.

மத்திய வங்கி ஊழல் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படும்-ஜனாதிபதி உறுதி.!

Posted by - December 26, 2017

அடுத்த ஆண்டு நடைபெறும் உள்ளூராட்சி தேர்தலுக்கு முன்னர்  மத்திய வங்கி பிணைமுறி ஊழல் விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாகவும், அறிக்கையினை சமர்ப்பிப்பதில் தாமதம் ஏற்படலாம் எனினும் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைப்பது உறுதி என அரச தொழில்முயற்சி இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன தெரிவித்தார். குற்றவாளிகளை தண்டிப்பதாக ஜனாதிபதி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வாராந்த செய்தியாளர் சந்திப்பு கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது.

களனி தொகுதி ஐ.தே.க செயற்பாட்டாளர்கள் சுதந்திரக் கட்சியில் இணைவு

Posted by - December 26, 2017

களனி தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய செயற்பாட்டாளர்கள் சிலர் இன்று (26) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதியை சந்தித்து ஜனாதிபதி முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித் திட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டனர். களனி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்களான கனிஷ்க சமரசிங்க, நோபட் பெரேரா மற்றும் பேலியகொட நகரசபையின் முன்னாள் உறுப்பினர் லக்ஷ்மன் பெரேரா உள்ளிட்ட நீண்ட காலமாக ஐக்கிய தேசியக் கட்சிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட செயற்பாட்டாளர்கள் இதில்

வாக்காளர் இடாப்பில் பெயர்கள் இல்லாதோர் வாக்களிக்க முடியாது – எம்.எம். மொஹமட்

Posted by - December 26, 2017

நடைபெறவுள்ள உள்ளுராட்சிமன்ற தேர்தலுக்கான வாக்காளர் இடாப்பில் வாக்காளருக்கான பெயர் இடம்பெறாதோர் வாக்களிக்க முடியாதென்று தேர்தல்கள் மேலதிக ஆணையாளர் எம். எம். மொஹமட் தெரிவித்துள்ளார். உள்ளுராட்சிமன்ற தேர்தல் தொடர்பாக ஊடக நிறுவனங்களின் ஆசிரியர்கள், ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்தும் செயலமர்வு ஒன்று இன்று காலை அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இங்கு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். மலையகம், வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தோர் தொழில் நிமிர்த்தம் காரணமாக கொழும்பு உள்ளிட்ட நகரப்பகுதிகளில் வசித்து வருகின்றனர்.