ஹெரோயின் வைத்திருந்த தம்பதி உள்ளிட்ட மூவர் கைது

351 0

இராஜகிரிய பகுதியில் ஹெரோயின் வைத்திருந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவர் வசம் இருந்து 4 கிராம் 150 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும், சந்தேகநபர் பொரளை பகுதியைச் சேர்ந்த 41 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.

இன்று அவரை புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, ஹெரோயினை தன்னகத்தே வைத்திருந்த கணவனும் மனைவியும் மாத்தளை பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது, மனைவியின் நெஞ்சுப் பகுதியிலும் கணவனின் உள்ளாடைக்குள்ளும் மிக நூதனமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குறித்த ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave a comment