மட்டில் இளைஞரை கத்தியால் குத்தி கொலை

593 0
மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி – பெரியகல்லாறு பகுதியில் உள்ள தேவாலய வளாகத்திற்குள் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று மாலை 07.00 மணியளவில் பெரியகல்லாறு ஊர் வீதியில் உள்ள புனித அருளானந்தர் தேவாலயத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கமே கத்திக்குத்துக்கு காரணம் என, களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, பெரியகல்லாறு முதலாம் குறிச்சி பிரதான வீதியை சேர்ந்த ஜேசுதாசன் திமேசன் (23) என்னும் இளைஞரே உயிரிழந்துள்ளார்.

மேலும், சந்தேகநபரும் அவரது தந்தையும் சரணடைந்துள்ளதாகவும், சடலம் பெரிய கல்லாறு மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்தால் அப் பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டதை தொடர்ந்து, பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதுடன் இது தொடர்பான விசாரணையை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Leave a comment