எழுக தமிழ், யாழிலிருந்து மட்டு நகருக்கு! – புகழேந்தி தங்கராஜ்
வெடிக்கக் காத்திருக்கும் எரிமலையாய் உள்ளுக்குள் குமுறிக் கொண்டுதான் இருக்கிறது இலங்கை. பொத்தாம்பொதுவாக ‘இலங்கை’ என்று குறிப்பிடுவதற்கு நியாயமான காரணம் இருக்கிறது. தமிழர்கள் மட்டுமில்லைஇ சிங்கள மக்களும் அங்கே நிம்மதியாய் இல்லை. போரில் தோற்றதாகச் சொல்லப்பட்டவர்களை விட வெற்றிபெற்றதாக அறிவித்துக் கொண்டவர்கள்தான் அதிக பதற்றத்தில் இருக்கின்றனர். ஒருபுறம் 2009 இனப்படுகொலையின் போது கொல்லப்பட்ட – சீரழிக்கப்பட்ட தமிழ் உறவுகளுக்கு நீதிபெற்றே தீர்வது என்கிற தமிழினத்தின் ஓர்மம் மேலும் மேலும் கூர்மையடைந்துகொண்டே போகிறது. இன்னொரு புறம் சிங்களச் சிப்பாய்களும் ராணுவ

