மண்டைதீவு பகுதியில் மிக பிரம்மாண்டமான கிரிக்கட் மைதானம்

288 0

eden-gardens-long-shotயாழ்ப்பாணம் -மண்டைதீவு பகுதியில் மிக பிரம்மாண்டமான கிரிக்கட் மைதானம் ஒன்று அமைக்க தீர்மானித்துள்ளதாகவும், இந்த திட்டம் நிறைவேறும் என்பதில் எமக்கு முழு நம்பிக்கையுள்ளது எனவும் இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்தார்.

இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இதை தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

இலங்கையில் வடக்கில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வன்னி, மன்னார் போன்ற பிரதேசங்களில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக யாழ்ப்பாணம் திகழ்கின்றது.

ஆகவே யாழ்ப்பாணத்திலுள்ள மண்டைதீவுப் பகுதியில் சர்வதேச கிரிக்கட் மைதானம் ஒன்று நிர்மாணிக்கப்படவுள்ளது.

தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானம் எவ்வாறு சாத்தியமானதோ அவ்வாறே யாழில் நிர்மாணிக்கப்படவுள்ள கிரிக்கெட் மைதானமும் சாத்தியமாகும் என குறிப்பிட்டார்.

ஹம்பாந்தோட்டையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சூரியவெவ கிரிக்கட் மைதானம் பற்றி எமக்கு தெரியாது. ஆனால் யாழில் அமையவுள்ள சர்வதேச அரங்கு கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் ஒத்துழைப்புடன் அமையவுள்ளது.

சூரியவெவ மைதானத்திற்கும் யாழ்ப்பாணத்தில் அமையவுள்ள சர்வவேதச கிரிக்கெட் மைதானத்திற்கும் முடிச்சு போடவேண்டாமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.