கூட்டு எதிர்க்கட்சி பகல் கனவு காண்கின்றது- திலிப் வெதஆராச்சி

256 0

photoகூட்டு எதிர்க்கட்சி புதிய அரசாங்கம் ஒன்றை அமைக்கும் பகல் கனவை கண்டுக்கொண்டிருப்பதாகவும் தலைகளை மாற்றினாலும் அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது எனவும் மீன்பிடி மற்றும் நீரியல்வள அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆராச்சி தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் மூலம் மக்களுக்கு பல பாரிய நிவாரணங்கள் கிடைத்தன.

மீன்பிடி தொழிலை மேம்படுத்தி, மீனவர்களின் உரிமைகளை பாதுகாத்து, மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

நாட்டை அபிவிருத்தி செய்யும் போது கூட்டு எதிர்க்கட்சி சீர்குலைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

பாசாங்குத்தனமாக இந்த அரசியல் சீர்குலைப்பு நடவடிக்கைளில் கூட்டு எதிர்க்கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர்.

நாங்கள் ஹம்பாந்தோட்டையில் அதனையே பார்த்தோம். ஹம்பாந்தோட்டை மக்கள் அதற்கு பதிலளித்தமை குறித்து நன்றி தெரிவித்து கொள்கிறோம். ஹம்பாந்தோட்டை மக்கள் நாட்டின் கௌரவத்தை பாதுகாத்தனர்.

கூட்டு எதிர்க்கட்சி புதிய அரசாங்கத்தை அமைக்க பகல் கனவு காண்கின்றது.

தலைகளை மாற்றினாலும் அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது. ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த எந்த நாடாளுமன்ற உறுப்பினரையும் பணம் கொடுத்து வாங்க முடியாது. கூட்டு எதிர்க்கட்சி கோஷ்டியிடம் அடிமையாக மாட்டோம்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திட்டம் 10 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முயற்சித்து. அதனை சீர்குலைக்க இவர்கள் முயற்சித்து வருகின்றனர்.

ஜீ.எஸ்.பி.பிளஸ் நாட்டுக்கு கிடைக்கவுள்ளது. கடன் சுமையில் இருந்து மீள துறைமுகத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. ஹம்பாந்தோட்டையில் நடத்தப்பட்ட தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் எனவும் திலிப் வெதஆராச்சி குறிப்பிட்டுள்ளார்.