இனவாத முயற்சிகள் தோற்கடிக்கப்பட வேண்டும் – எம்.எம். சுஹைர்

287 0

photo-21இலங்கையில் பெரும்பான்மையான மக்கள் இனவாதம் மற்றும் மதாவதத்தை அனுமதிக்காதபோதும், மிகவும் சொற்பமான தொகையினர் இனவாதம் மற்றும் மதவாதத்தை தூண்டி, மக்களை பிரித்து விடுவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சின் இராஜாங்க செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். சுஹைர் தெரிவித்துள்ளார்.

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க வாரத்தை முன்னிட்டு, கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்;

‘இவர்களின் இந்த முயற்சியை நாம் தோற்கடிக்க வேண்டும், இந்த நாட்டை முன்னேற்ற வேண்டுமாயின், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் மிகவும் அவசியமாகும். எனவே, இன்று அனைவரும் பேதங்களை மறந்து, ஒற்றுமையாகி, நாட்டை முன்னேற்றுவதற்கு பங்களிப்பது கட்டாயமான ஒரு செயற்பாடாகும்” எனக் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க, இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம் பௌஸி உட்பட பலர் கலந்துகொண்டனர்.