அரசாங்கம் மக்களின் வரிப்பணத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுத்துள்ளது- அஜித் மான்னப்பெரும

264 0

0210நாட்டின் வரி வருமானத்தை பலன்தரும் வகையில் மக்களிடம் கொண்டு செல்வதே அரசாங்கத்தின் இலக்கு என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டபோதே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

நாட்டின் வரிப்பணத்தை எப்படி பாதுகாப்பது என்பதை நாம் தேடிப்பார்க்க வேண்டும்.

அந்த பணம் அரசியல்வாதிகளின் பைகளுக்குள் செல்லாது, மக்களுக்கு நிவாரணங்களை வழங்க வேண்டும். எமது அரசாங்கம் மக்களின் வரிப்பணத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

2016 ஆம் ஆண்டில் வரி அறவீடுகள் மூலம் உழைக்கக் கூடிய 6 லட்சத்து 94 ஆயிரம் கோப்புகள் மாத்திரமே இருந்தன. தற்போது அது 14 லட்சத்து 50 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

2014 ஆம் ஆண்டில் நாட்டின் ஏற்றுமதி 14.9 வீதமாக குறைந்திருந்தது. எதிர்காலத்தில் எமக்கு ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை கிடைக்கவுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச 200 ஆடைத் தொழிற்சாலைகளை திறந்தார். அவற்றில் 180 தொழிற்சாலைகள் மூடப்பட்டு விட்டன. மீண்டும் கிடைக்கவுள்ள ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை மூலம் புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகும்.

கூட்டு எதிர்க்கட்சி நாட்டுக்குள் பொய்களை கூறி பொய்யான பிசாசுகளை உருவாக்கி வருகிறது. எதிர்க்கட்சியினருக்கு தற்போது பேசுவதற்கு எதுவுமில்லை என்பதால், பொய்யான பிசாசுகளை உருவாக்கி வருகின்றனர்.

அரசாங்கம் மேற்கொள்ளும் விடயங்களை தெளிவாக அறிந்து கொள்ள தகவல் அறியும் சட்டம் உள்ளது. இதில் மக்கள் பிரயோசனத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். உழைக்கும் சமூகம் ஒன்றை நல்லாட்சி மூலம் கட்டியெழுப்புவோம் எனவும் அஜித் மான்னப்பெரும குறிப்பிட்டுள்ளார்.