அரசாங்கத்தின் மீதான மக்கள் ஆணை குறைவடைந்து செல்கின்றது- திஸ்ஸ

Posted by - January 20, 2017

அரசாங்கத்தின் மீதான மக்கள் ஆணை குறைவடைந்து செல்வதாக முன்னாள் அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். மக்கள் எதிர்பார்ப்புக்கு எதிராக செயற்பட்ட காரணத்தாலேயே, 2001ம் ஆண்டு அமைக்கப்பட்ட ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் கவிழ்க்கப்பட்டது என்று திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். ராமஞ்ய பீடத்தின் மாகாநாயக்க தேரர்களை சந்தித்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த திஸ்ஸ அத்தநாயக்க, தான் மீண்டும் அரசியலில் முன்னோக்கிச் செல்லப்போவதாக கூறினார்.

அலங்காநல்லூரில் 100 மணி நேரத்தைத் தாண்டியது ஜல்லிக்கட்டு போராட்டம்

Posted by - January 20, 2017

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் 100 மணி நேரத்தைத் தாண்டி சாதனை படைத்துள்ளது.

சிரியாவில் வான்வெளி தாக்குதல்: 40 ஜிகாதிஸ்ட் தீவிரவாதிகள் பலி

Posted by - January 20, 2017

சிரியாவின் வடக்குப் பகுதியில் நடத்தப்பட்ட வான்வெளி தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட ஜிகாதிஸ்ட் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

சரத் குமார குணரத்னவுக்கு பிணை

Posted by - January 20, 2017

நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, முன்னாள் பிரதி அமைச்சர் சரத் குமார குணரத்னவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணையில் விடுவித்துள்ளது. சரத் குமார குணரத்னவை, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கடந்த 2ஆம் திகதி கைதுசெய்தனர். குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, 25,000 ரூபா ரொக்கப் பிணையிலும், 10 இலட்சம் ரூபா பெறுமதியில் இரண்டு சரீரப்பிணையிலும் அவரை விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க பண்டார உத்தரவிட்டார்.

லட்சியத்தை வெல்ல குவியும் தமிழர்கள்

Posted by - January 20, 2017

தமிழர்களின் பாரம்பரிய உரிமையை மீட்டெடுக்க மாணவர்கள் தொடங்கிய ஜல்லிக்கட்டு உரிமை போராட்டம் மாபெரும் மக்கள் போராட்டமாக விசுவரூபம் எடுத்துள்ளது.

நாட்டின் பல பாகங்களில் இடியுடன்கூடிய மழை பெய்யும்- வளிமண்டலவியல் திணைக்களம்

Posted by - January 20, 2017

நாட்டின் பல பாகங்களில் இடியுடன்கூடிய மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டில் காலநிலையில் இன்று முதல் மாற்றம் நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வடக்கு வடமத்திய மாகாணம் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இடியுடன்கூடிய மழை பெய்யக்கூடும் என்று திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதனால் வறட்சியான காலநிலையில் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.நாட்டின் சில பகுதிகளில் 75 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியம், சில பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் இடியுடன்

தமிழ்நாடு முழுவதும் கடையடைப்பு: விக்கிரமராஜா தலைமையில் வணிகர்கள் ஆர்ப்பாட்டம்

Posted by - January 20, 2017

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கோரி தமிழ்நாடு முழுவதும் வணிகர்கள் கடைகளை அடைத்து போராட்டத்தில் பங்கேற்றனர்.

நெடுந்தீவு குறிக்கட்டுவானுக்குரிய புதிய படகு சேவை(காணொளி)

Posted by - January 20, 2017

யாழ்ப்பாணம் நெடுந்தீவு குறிக்கட்டுவானுக்குரிய புதிய படகு சேவை இன்று மாகாணசபை உள்ளுராட்சி அமைச்சரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. நெடுந்தீவு குறிக்கட்டுவானுக்குரிய நெடுந்தாரகை படகு சேவை இன்று காலை வைபவ ரீதியாக மாகாணசபை உள்ளுராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் தொடக்கிவைக்கப்பட்டுள்ளது.150 மில்லியன் ரூபா மதிப்பீட்டில் டொக்யார்ட் நிறுவனத்தினால் அமைக்கப்பட்ட சர்வதேச தரத்துடனான படகு சேவை முதன்முறையாக இன்று தொடக்கிவைக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் 100 மில்லியன் ரூபா மற்றும் உலக வங்கியின் 50 மில்லியன் ரூபா தொகையில் ஒரே நேரத்தில் 80

தமிழக முதல்வரின் அறிவிப்பு ஆறுதல் அளிக்கிறது: மு.க.ஸ்டாலின்

Posted by - January 20, 2017

ஜல்லிக்கட்டு போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழக முதல்வரின் அறிவிப்பு ஆறுதல் அளிப்பதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மக்கள் விருப்பப்படி ஜல்லிக்கட்டை நானே தொடங்கி வைப்பேன்: தமிழக முதல்வர்

Posted by - January 20, 2017

மக்கள் விருப்பப்படி ஜல்லிக்கட்டை நானே தொடங்கி வைப்பேன் என தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார்.