நெடுந்தீவு குறிக்கட்டுவானுக்குரிய புதிய படகு சேவை(காணொளி)

297 0

nedunthevuயாழ்ப்பாணம் நெடுந்தீவு குறிக்கட்டுவானுக்குரிய புதிய படகு சேவை இன்று மாகாணசபை உள்ளுராட்சி அமைச்சரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

நெடுந்தீவு குறிக்கட்டுவானுக்குரிய நெடுந்தாரகை படகு சேவை இன்று காலை வைபவ ரீதியாக மாகாணசபை உள்ளுராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் தொடக்கிவைக்கப்பட்டுள்ளது.150 மில்லியன் ரூபா மதிப்பீட்டில் டொக்யார்ட் நிறுவனத்தினால் அமைக்கப்பட்ட சர்வதேச தரத்துடனான படகு சேவை முதன்முறையாக இன்று தொடக்கிவைக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் 100 மில்லியன் ரூபா மற்றும் உலக வங்கியின் 50 மில்லியன் ரூபா தொகையில் ஒரே நேரத்தில் 80 பயணிகள் 40 கிலோகிராம் பொதிகளுடன் பயணிக்கக்கூடிய வகையில், பயணிகள் பாதுகாப்பான முறையில் நெடுந்தாரகைப் படகானது அமைக்கப்பட்டுள்ளது.நெடுந்தீவு பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில், பிரதேச செயலகத்தில் மக்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கேற்ப நீரியல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு படகு சேவை உருக்குத்தகடுகள் மூலம் அமைக்கப்பட வேண்டும் என்ற நாரா நிறுவனத்தின் ஆலோசனைக்கேற்ப நெடுந்தாரகைப்படகு வடவமைக்கப்பட்டுள்ளது.

இன்றைய ஆரம்ப நிகழ்வில் இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவர் பிறைஸ் கட்சிசன், உலக வங்கியின் இலங்கை மற்றும் மாலைதீவிற்கான பிரதிநிதி ஐடா பஸ்வரி ரிடவ், சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், வடக்கு கடற்படை பதில் தலைமை அதிபதி, வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள், வடக்கு மாகாணசபையின் பிரதம செயலாளர், ஆலோசனை வழங்கிய ஓய்வுபெற்ற பொறியியலாளர் குமாரநாயகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.