அடக்கு முறைக்கு எதிரான உணர்வுபூர்வமான போராட்டம் – வர்மா

Posted by - January 20, 2017

இயற்கைக்கு நன்றி கூறும் திருநாள் தைப்பொங்கல் தமிழர்களின் வாழ்வோடு ஒன்றித்த தைப்பொங்கலுக்கு அடுத்த நாளை உழவுக்கு உதவிபுரிந்த  காளைக்கும் கோமாதாவுக்கும் உரிய  நாளாக தமிழ் மக்கள் கொண்டாடிவருகின்றனர்.

வவுனியாவில் காணாமல் போன உறவுகளை மீட்டுத்தரக்கோரி உண்ணாவிரதப் போராட்டம்

Posted by - January 20, 2017

தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு காணாமல் போன உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தினர் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். நான்கு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தவுள்ளதாக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித்தலைவர் ஆகியோருக்கு கையொப்பமிட்டு அறிவுறுத்தல் கடிதம் ஒன்றை இன்று (20) அனுப்பி வைத்துள்ளனர். வவுனியாவில் மாவீரன் பண்டாரவன்னியன் உருவச்சிலைக்கு முன்பாக எதிர்வரும் திங்கட்கிழமை அன்று காலை 8.00 மணியிலிருந்து சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக குறித்த

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தில் மோசடிகள் – கபிர் ஹாசிம்

Posted by - January 20, 2017

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தில் மோசடிகள் இடம்பெற்று வருவதாக அமைச்சர் கபிர் ஹாசிம் ஒப்புக்கொண்டுள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.மேலும் கருத்து தெரிவிக்கையில்,விமான சேவை நிறுவனத்தில் ஓர் மாபீயா இயங்கி வருகின்றது என்பதனை ஒப்புக்கொள்கின்றேன். இந்த விடயம் குறித்து துரித கதியில் விசாரணைகள் நடத்தப்படும். கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தில் பாரியளவில் மோசடிகள் இடம்பெற்றன. இந்த சம்பவங்கள் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கூட்டு எதிர்க்கட்சியில்

மட்டக்களப்பில் கடும் மழை

Posted by - January 20, 2017

நீண்ட வறட்சிக்குப் பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று காலை முதல் மழை பெய்து வருகின்றது. இதனால் வறட்சிக்குட்பட்டிருந்த பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது.இன்று 10.5 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். இம்முறை இம்மாவட்டத்தில் 1 இலட்சத்து 50 ஆயிரம் ஏக்கரில் பெரும்போக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்தபோதிலும் இதில் பெருமளவிலான நெல்வயல்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன.தொடர்ந்தும் மழை பெய்யுமென வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது

தனியார் நிறுவனங்களில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு ஜனாதிபதி கோரிக்கை

Posted by - January 20, 2017

தனியார் வர்த்தக நிறுவனங்களில் விளம்பரம் மற்றும் அலங்கரிப்புக்காக பயன்படுத்தப்படும் மின்விளக்குகளை அணைத்து மின்சாரத்தை சிக்கனப்படுத்துமாறு ஜனாதிபதி அனைத்து தனியார் நிறுவனங்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார். எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய வறட்சியுடன் மின்சார நெருக்கடிக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளதால், தற்போதிருந்தே மின்சாரத்தை சிக்கனமாக பாவிப்பது அனைவரினதும் பொறுப்பாகும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டினார். தமது பிரச்சார செயற்பாடுகளுக்காக பெரும்பாலான தனியார் நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் விளம்பரப் பலகைகள் அலங்காரமின் கட்டமைப்புகளுக்காக பெருமளவு மின்சாரம் செலவிடப்படுகிறது. அதனை மட்டுப்படுத்துவதன் மூலம் நாட்டின் பாவனையை கணிசமானளவு

2020 ஜனாதிபதி வேட்பாளராக சஜித் போட்டி

Posted by - January 20, 2017

இலங்கையின் பிரதமராக சமகால அமைச்சர் சஜித் பிரேமதாஸ பதவியேற்பார் என ஆரூடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் 31ஆம் திகதி சஜித் பிரேமதாஸ உரிய முறையில் இலங்கையின் பிரதமராக பதவிப் பிரமானம் செய்து கொள்வார் என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் முன்னாள் ஆஸ்தான சோதிடர் சுமனதாஸ அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். இந்த மாதம் 26ஆம் திகதி ஏற்படும் கிரக மாற்றம், இலங்கை அரசியலை தலைகீழாக மாற்றும் அளவிற்கு காணப்படும். பிரதமர்

முல்லைத்தீவு பெருங்காட்டுப் பகுதியில் தண்ணீர் மோட்டைகள் வற்றிய காரணத்தினால் வீதிக்கு வருகின்றது யானைகள்

Posted by - January 20, 2017

முல்லைத்தீவு பெருங்காட்டுப் பகுதியில் தண்ணீர் மோட்டைகள் வற்றிய காரணத்தினால் காட்டு யானைகள் குளங்களை நோக்கி படை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த யானைக்கூட்டம் முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான், மாங்குளம் பிரதான வீதிகள் ஊடாக நேரகாலம் இன்றி திடீர் திடீரென கடக்க முயற்சிப்பதாக அறியப்படுகின்றது. இதேவேளை துணுக்காய், அக்கராஜன் பிரதான வீதி மற்றும் ஸ்கந்தபுரம், கிளிநொச்சி பிரதான வீதிகள் ஊடாகவும் கடந்து செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில் பிரதான வீதிகளில் யானைகள் கடக்கும் பிரதேசம் அவதானம் என அறிவிப்பு பலகை நாட்டப்பட்டுள்ளது. எனினும்

இவ்வருட நடுப்பகுதியில் எட்கா எனப்படும் பொருளாதார மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான இந்தியாவுடனான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும்(காணொளி)

Posted by - January 20, 2017

எட்கா எனப்படும் பொருளாதார மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான இந்தியாவுடனான ஒப்பந்தம் இவ்வருட நடுப்பகுதியில் கைச்சாத்திடப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் இடம்பெறுகின்ற உலக பொருளாதார மாநட்டில் கலந்து கொள்ள சென்றுள்ள பிரதரமர், இந்தியாவின் என்.டி.டீ.விக்கு வழங்கியுள்ள செவ்வியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை முழுமையாக பெற்றுக்கொள்வதற்கான செயற்பாடுகள் முடிவடைந்த பின்னர் ஐரோப்பாவுடன் பொருளாதார தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள இலங்கை எதிர்பார்த்திருப்பதாக ரணில் விக்கிரமசிங்க கூறினார்.

வவுனியா பிரதேச செயலகத்தில் பொங்கல் மற்றும் கலை நிகழ்வுகள் (காணொளி)

Posted by - January 20, 2017

வவுனியா பிரதேச செயலகத்தில் பொங்கல் மற்றும் கலை நிகழ்வுகள் இன்று நடைபெற்றன. வவுனியா பிரதேச செயலகத்தின் பொங்கல் நிகழ்வுகள் பிரதேச செயலாளர் கா.உதயராசா தலைமையில் இன்று நடைபெற்றன. வவுனியா பிரதேச செயலகத்தின் வளாக முற்றலில் பொங்கல் பானை வைத்து பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர் மற்றும் ஊழியர்கள் அரிசியிட்டு பொங்கல் நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர். அதனைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றல் மற்றும் இறை வணக்கத்துடன் பிரதேச செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் நிகழ்வுகள் ஆரம்பமாகின. பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரியின் மாணவர்களின்

இந்திய கடற்படையின் போர்க்கப்பல் உற்பத்தி கட்டுப்பாட்டாளர் இலங்கை கடற்படை தளபதியை சந்தித்தார்

Posted by - January 20, 2017

இந்திய கடற்படையின் போர்க்கப்பல் உற்பத்தி கட்டுப்பாட்டாளர் இலங்கை கடற்படை தளபதியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்திய கடற்படையின் போர்க்கப்பல் உற்பத்தி மற்றும் பொறுப்பேற்றல் கட்டுப்பாட்டாளர் வைஸ் அட்மிரல் தேஷ் பாண்டே, நேற்று இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தனவைச் சந்தித்து கலுந்துரையாடினார். இலங்கை கடற்படைத் தலைமையகத்தில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.இந்தச் சந்திப்பின் போது, இருதரப்பு நலன்கள் சார்ந்த விவகாரங்கள் குறித்துப் பேச்சு நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவிடம் இருந்து இலங்கை கடற்படை இரண்டு ஆழ்கடல் ரோந்துப்