2020 ஜனாதிபதி வேட்பாளராக சஜித் போட்டி

298 0

sajith premadasaஇலங்கையின் பிரதமராக சமகால அமைச்சர் சஜித் பிரேமதாஸ பதவியேற்பார் என ஆரூடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதம் 31ஆம் திகதி சஜித் பிரேமதாஸ உரிய முறையில் இலங்கையின் பிரதமராக பதவிப் பிரமானம் செய்து கொள்வார் என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் முன்னாள் ஆஸ்தான சோதிடர் சுமனதாஸ அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த மாதம் 26ஆம் திகதி ஏற்படும் கிரக மாற்றம், இலங்கை அரசியலை தலைகீழாக மாற்றும் அளவிற்கு காணப்படும். பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அவருடன் நெருக்கமாக செயற்படும் அமைச்சர்கள் பலர் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரணசிங்க பிரேமதாஸ, ஜனாதிபதியாகிய சந்தர்ப்பத்தில் பலமாக இருந்த கிரகம் இந்த மாதம் 26ஆம் திகதியின் பின்னர் சஜித் பிரேமதாஸவின் கிரகமும் அந்த அளவிற்கு பலமடையும் என அவர் கூறியுள்ளார்.

2020ஆம் ஆண்டு ஜனாதிபதி வேட்பாளராக ஐக்கிய தேசிய கட்சியிலும் சஜித் பிரேதாஸ தான் போட்டியிடுவார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் 2020ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆரூடம் வெளியிடுவதற்கு தான் தயாரில்லை. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் எதிர்கட்சி ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் உரிய விழிப்புணர்வு இல்லாமையினாலே தகவல் வெளியிட முடியாதென அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 12 வருடங்களுக்கு ஐக்கிய தேசிய கட்சிக்கு சஜித் பிரேமதாஸ தலைமைத்துவம் வழங்குவதாக குறித்த சுமனதாஸ, சஜித்தின் பின்னர் சிங்கம் என பெயர் கொண்ட இளம் தலைவர் ஐக்கிய தேசிய கட்சி தலைவராகுவார் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.