கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறலாம் என்று நினைத்தேன்: இந்திய வீரர் யுவராஜ்சிங் பேட்டி

Posted by - January 21, 2017

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விடலாம் என்று நினைத்ததாக இந்திய வீரர் யுவராஜ்சிங் கூறியுள்ளார். கட்டாக்கில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்ட 35 வயதான யுவராஜ்சிங் நிருபர்களிடம் கூறியதாவது:- அணியும், கேப்டனும் நம் மீது நம்பிக்கை வைக்கும் போது எப்போதும் தன்னம்பிக்கை வந்து விடும். என் மீது விராட் கோலி நிறைய நம்பிக்கை வைத்திருக்கிறார். இதே போல்

ஜல்லிக்கட்டை விரைந்து நடத்துவது குறித்து அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகளுடன் சசிகலா ஆலோசனை

Posted by - January 21, 2017

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவை, முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து ஜல்லிக்கட்டை விரைந்து நடத்துவதற்காக, பிரதமரை சந்தித்து மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விவரமாக எடுத்துரைத்தார். ஒட்டுமொத்த தமிழக மக்களின் வேண்டுகோளான ஜல்லிக்கட்டை விரைந்து நடத்துவது குறித்து, பொதுச்செயலாளர் சசிகலா, பொருளாளரும், முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், திண்டுக்கல் மாவட்ட அவைத்தலைவரும், வனத்துறை அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி, நகராட்சி நிர்வாகம், ஊரக

ஒபாமா ஓய்வை தொடர்ந்து டுவிட்டரில் முதலிடம் பிடித்த மோடி

Posted by - January 21, 2017

பிரதமர் நரேந்திர மோடி, அன்றாட நிகழ்வுகள் மற்றும் தனது சந்திப்புகள் பற்றிய தகவலை சமூக வலைத்தளங்கள் மூலம் உடனுக்குடன் தெரிவித்து வருகிறார். ‘டுவிட்டர்’ சமூக வலைத்தளத்தில், அதிகமானோர் பின்தொடரும் நாட்டு தலைவர்கள் பட்டியலில், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா முதலிடம் வகித்து வந்தார். அவரை 8 கோடியே 10 லட்சம் பேர் பின்தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில், ஜனாதிபதி பதவியில் இருந்து ஒபாமா நேற்று ஓய்வு பெற்றதை தொடர்ந்து, அதிகம்பேர் பின்தொடரும் நாட்டு தலைவர்கள் பட்டியலில் மோடி முதலிடத்தை பிடித்துள்ளார்.

வேலைவாய்ப்புகளை பிற நாட்டினர் எடுத்துக்கொள்ள விட மாட்டோம் – டிரம்ப்

Posted by - January 21, 2017

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் நேற்று பதவி ஏற்றார். முன்னதாக, ‘மீண்டும் அமெரிக்காவை மாபெரும் நாடாக்குவோம்’ என்ற பொருளில் வாஷிங்டனில் நடந்த விழாவில் பல்லாயிரக்கணக்கானோர் மத்தியில் அவர் தனது மனைவி மெலானியா டிரம்புடன் கலந்து கொண்டார். அந்த விழாவில் பேசிய அவர் அமெரிக்கர்களை ஒன்றுபடுத்துவதற்கு வாக்குறுதி அளித்தார். அப்போது அவர், “நான் கடுமையாக உழைப்பேன் என்ற உறுதியை உங்களுக்கு அளிக்கிறேன் நாம் மீண்டும் சாதனைகள் படைப்போம். நாம் மீண்டும் நம்மவர்களுக்கு வேலைவாய்ப்புகளை கொண்டு வருவோம். நமது வேலைவாய்ப்புகளை

சிரியாவில் வான்வெளி தாக்குதல்: 40 ஜிகாதிஸ்ட் தீவிரவாதிகள் பலி

Posted by - January 21, 2017

சிரியாவின் வடக்குப் பகுதியில் உள்ள முன்னாள் அல்-கொய்தா உடன் தொடர்புடைய பெடே அல்-ஷாம் முன்னணி அமைப்பை சேர்ந்தவர்களின் முகாம்களை குறி வைத்து வான்வெளி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட ஜிகாதி தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக மனித உரிமைக்கான சிரிய கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. அலெப்போ மாகாணத்தில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலை யார் நடத்தினார்கள் என்பது உடனடியாக தெரியவில்லை என்று கண்காணிப்பு மையம் கூறியுள்ளது. சிரியாவில் பெடே அல்-ஷாம் தீவிரவாதிகளுக்கு எதிராக கடந்த சில வாரங்களாக அமெரிக்கா

45வது அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றார்

Posted by - January 21, 2017

அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப்பும் ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளின்டன் போட்டியிட்டனர். நவம்பர் 8ஆம் திகதி நடந்த ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்டு, டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். இந்தநிலையில், தலைநகர் வாசிங்டனில் நடைபெற்ற விழாவில் உலக நாடுகளை சேர்ந்த பிரபலங்கள் கலந்துகொண்டனர். டிரம்ப் பதவி ஏற்பு விழாவுக்காக வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. பதவி ஏற்பு விழாவை நேரில்

17 மாடி கட்டிடம் சரிந்து வீழ்ந்ததில் தீயணைப்பு வீரர்கள் 30 பேர் பலி

Posted by - January 21, 2017

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் 17 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் தீயணைக்கும் வீரர்கள் 30 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். ஈரான் தலைநகர் டெஹ்ரானில் பிரபல தொழில் அதிபர் ஹபீப் எல்கானியனுக்கு சொந்தமான பிளாஸ்டிக் கம்பெனியின் தலைமை அலுவலகம் அந்த நகரில் உள்ள 17 மாடி கட்டிடத்தில் இயங்கி வந்தது. காலை 8 மணி அளவில் இந்த கட்டிடத்தில் திடீரென பிடித்துக் கொண்ட தீ அத்தனை மாடிகளுக்கும் பரவியது. தீயை அணைக்க 100-க்கும் மேற்பட்ட

மெல்போர்ன் சிற்றூர்ந்து விபத்தில் மூன்று பேர் பலி

Posted by - January 21, 2017

அவுஸ்திரேலியா மெல்போர்ன் நகரில் பயணித்த சிற்றூர்ந்து ஒன்று வீதியை விட்டு விலகி பாதசாரிகள் மீது மோதுண்டதில் 3 பேர் பலியாகினர். சம்பவத்தில் 20 பேர் வரை காயமடைந்துள்ளனர். வேக கட்டுப்பாட்டை மீறியமையே இந்த அனர்த்தத்திற்கான காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை விக்டோரியா காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

அதுரலிய ரதன தேரர் மீது குற்றச்சாட்டு…

Posted by - January 21, 2017

நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரதன தேரர் ஒரு தனிப்பட்ட ஆட்சியாளரை உருவாக்குவதற்கு முயற்சி செய்து வருவதாக பிரஜைகள் அமைப்பு ஒன்றியம் குற்றம்சாட்டியுள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அதன் உறுப்பினர் சமீர பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார். 2015 ஆம் ஆண்டுக்கு பிறகு ஜனநாயக விரோத ஆட்சியாளர்களுக்கு மக்களிடம் அனுமதி இல்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் அலிபாபா….

Posted by - January 21, 2017

இணையத்தின் ஊடாக பொருட்கள் சேவைகளை பெற்றுக் கொள்வதற்கு உதவி புரியும் உலக பிரபல சீன நிறுவனமான அலிபாபா நிறுவனம் இந்நாட்டில் முதலீட்டினை மேற்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளது. அதன் தலைவர் ஜெக் மா மற்றும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு இடையில் சுவிச்சர்லாந்தில் இடம்பெறும் உலக பொருளாதார மாநாட்டிற்கு இணையாக இடம்பெற்ற பேச்சுவாரத்தையொன்றில் அவர் இந்த கருத்தை தெரிவித்தாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.