அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப்பும் ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளின்டன் போட்டியிட்டனர்.
நவம்பர் 8ஆம் திகதி நடந்த ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்டு, டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார்.
இந்தநிலையில், தலைநகர் வாசிங்டனில் நடைபெற்ற விழாவில் உலக நாடுகளை சேர்ந்த பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
டிரம்ப் பதவி ஏற்பு விழாவுக்காக வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
பதவி ஏற்பு விழாவை நேரில் காண்பதற்காக வாசிங்டனில் அமெரிக்கர்கள் ஆயிரக்கணக்கில் குவிந்தனர்.
விழாவில் வெள்ளை மாளிகை வந்த டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவியை, முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா அவரது மனைவி ஆகியோர் வரவேற்றனர்.
வெள்ளை மாளிகை வளாகத்தில் ஆரம்பமான விழாவில் ஜனாதிபதியாக டெனால்டு டிரம்ப், துணை ஜனாதிபதியாக பென்ஸி ஆகியோர் பதவியேற்றனர்.
அமெரிக்க மக்களின் பலத்த கைத்தட்டல்களுக்கு இடையே அமெரிக்காவில் 45வது ஜனாதிபதியாக
டெனால்ட் டிரம்ப் பதவியேற்றார்.
இந்த விழாவில் சர்வதேச நாடுகளை சேர்ந்த கலைஞர்கள் பங்கேற்கும் கலைநிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.