17 மாடி கட்டிடம் சரிந்து வீழ்ந்ததில் தீயணைப்பு வீரர்கள் 30 பேர் பலி

248 0
தீயை அணைக்க 100-க்கும் மேற்பட்ட தீயணைக்கும் படை வீரர்கள், ராட்சத கிரேன்களுடன் உடனடியாக அந்த கட்டிடத்திற்கு விரைந்தனர்.

அவர்கள் நாலாபுறமும், கிரேன்களில் இருந்தவாறு தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த அடுக்குமாடி கட்டிடம் திடீரென இடிந்து சரிந்தது. அதன் இடிபாடுகள் தீயணைக்கும் வீரர்கள் இருந்த கிரேன்கள் மீது விழுந்தன.

இதில் தீயணைக்கும் வீரர்கள் 30 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கியும், தீக்காயம் அடைந்தும் உயிர் இழந்தனர்.

38 பேர் படுகாயம் அடைந்தனர்.