கிழக்கின் எழுக தமிழ் கிழக்கைப்பாதுகாப்பதை பிரகடனமாக எடுக்கவேண்டும்

Posted by - February 1, 2017

தமிழ் மக்கள் பேரவை கிழக்கின் எழுகதமிழ் நிகழ்வை வரும் 10 ஆம் திகதி மட்டக்களப்பில் நடாத்த இருக்கின்றது. அதற்கான ஏற்பாடுகள் தயாராகிக்கொண்டிருக்கின்றன. அரசியற் செயற்பாட்டாளர்கள் கிராமமம் கிராமமாக பிரச்சாராம் செய்து துண்டுப்பிரசுரங்களை விநியோகித்துவருவதுடன் பொதுக்கூட்டங்களையும் நடாத்திவருகின்றனர்.இந் நிகழ்வு தை 21 ஆம் திகதி நடைபெற இருந்தது. கூட்டமைப்பின் நெருக்கடிகளினால் பெப்ரவரி 10 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இந்த ஆண்டுக்கான முதலாவது மாநாடு மார்ச் மாதம் இடம்பெறவுள்ளது.

Posted by - February 1, 2017

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் இந்த ஆண்டுக்கான முதலாவது மாநாடு எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் இடம்பெறவுள்ளது. இந்த நிலையில் இலங்கை தொடர்பில் இந்திய அரசாங்கம் ஜெனீவா மாநாட்டில் பிரேரணை ஒன்றை முன்வைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழ் நாட்டின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், தமிழக வாழ்வுரிமை கட்சி, தமிழ் தேசிய கட்சி மற்றும் பெரியர் கழகம் என்பன இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளன. இலங்கை மீது முன்வைக்கப்பட்டுள்ள போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பில்

சர்வதேச நாடுகளின் தலையீடு இல்லாமல் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான நிரந்தரத் தீர்வும் கிடைக்கப் போவதில்லை-சீ.யோகேஸ்வரன்

Posted by - February 1, 2017

சர்வதேச  நாடுகளின் தலையீடு இல்லாமல் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான நிரந்தரத் தீர்வும் கிடைக்கப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினரின் மட்டக்களப்பு அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கருத்துத் தெரிவித்தபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், சிறுபான்மையின மக்களின் ஆதரவுடன் ஆட்சிபீடம் ஏறிய அரசாங்கம், காணாமல் போனோரின் உறவுகளினால் முன்னெடுக்கப்படும் அகிம்சை ரீதியான போராட்டங்களை கொச்சைப்படுத்துகின்றது. காணாமல் ஆக்கப்பட்ட

அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து நாட்டை ஒரே நாடாக முன்கொண்டு செல்வதே தனது அரசாங்கத்தின் நோக்கம்-மைத்ரிபால சிறிசேன

Posted by - February 1, 2017

அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து நாட்டை ஒரே நாடாக முன்கொண்டு செல்வதே தனது அரசாங்கத்தின் நோக்கம் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி தள வைத்தியசாலையின் புதிய வெளிநோயாளர் பிரிவையும், வாட்டுத் தொகுதியையும் மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் இன்று முற்பகல் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். எதிர்வரும் மூன்று ஆண்டுகளில் கிழக்கு மாகாணத்தின் அனைத்துக் குறைபாடுகளும் முழுமைப்படுத்தப்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இந்த அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு முன்னுரிமையளித்து செயற்படுவதாகவும் தெரிவித்தார். நாட்டில் உறுதிசெய்யப்பட்டுள்ள

நல்லூரில் அட்டகாசம் செய்த மோட்டார் சைக்கிள் கும்பல் கைது

Posted by - February 1, 2017

யாழ்ப்பாணம் நல்லூர் அரசடி வீதி சந்தியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவருக்கு காயம் ஏற்படுத்தி, வர்த்தக நிலையம் ஒன்றுக்கு தீயிட்டு சேதத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் மோட்டார் சைக்கிள் குழுவின் சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். கோப்பாய் தவசகுளம் பகுதியில் குறித்த நபர்களை கைது செய்துடன், மூன்று நாட்கள் தொடர்ச்சியான தேடுதல்களின் பின்னர் ஐந்து சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடம் இருந்த 6 வாள்கள், ஒரு கை கோடரி, ஒரு மோட்டார் சைக்கிள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரித்துள்ளனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது அமர்வில் மங்கள சமரவீர உரையாற்றவுள்ளார்

Posted by - February 1, 2017

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது அமர்வில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உரையாற்றவுள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது அமர்வு, பெப்ரவரி 27ஆம் திகதி முதல் மார்ச் 24ஆம் திகதிவரை ஜெனீவாவில் நடைபெறவுள்ளது.

ஹிருணிக்காவிடம் விசாரணை?

Posted by - February 1, 2017

நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர, இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மரண தண்டனை கைதிகள் 60 பேருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மன்னிப்பு வழங்கியுள்ளார்

Posted by - February 1, 2017

69ஆவது சுதந்திரத் தினத்தை​முன்னிட்டு, மரண தண்டனை கைதிகள் 60 பேருக்கு ஜனாதிபதிமைத்திரிபால சிறிசேன மன்னிப்பு வழங்கியுள்ளார்.

ரணில் ஓர் கடுமையான தமிழ் இனவாதி: ஞானசார தேரர்

Posted by - February 1, 2017

பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஓர் கடுமையான தமிழ் இனவாதி என பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

மைத்திரி இருக்கும்வரை சமஷ்டிக்கே இடமில்லை!

Posted by - February 1, 2017

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருக்கும்வரை சமஷ்டி என்ற பேச்சுக்கே இடமில்லை. அத்துடன், வடக்கு – கிழக்கு மீளிணைப்பு கனவிலும் நிகழாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.