ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இந்த ஆண்டுக்கான முதலாவது மாநாடு மார்ச் மாதம் இடம்பெறவுள்ளது.

235 0

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் இந்த ஆண்டுக்கான முதலாவது மாநாடு எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் இடம்பெறவுள்ளது.

இந்த நிலையில் இலங்கை தொடர்பில் இந்திய அரசாங்கம் ஜெனீவா மாநாட்டில் பிரேரணை ஒன்றை முன்வைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ் நாட்டின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், தமிழக வாழ்வுரிமை கட்சி, தமிழ் தேசிய கட்சி மற்றும் பெரியர் கழகம் என்பன இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளன.

இலங்கை மீது முன்வைக்கப்பட்டுள்ள போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பில் சர்வதேச நீதிபதிகளின் பங்குபற்றுதலுடன் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஜெனீவா பிரேரணையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால் அரசாங்கம் இதனை புறக்கணித்து வருகிறது.

இந்த நிலையில் போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகளையும் உள்ளடக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில், இந்திய அரசாங்கம் ஜெனீவா மாநாட்டில் பிரேரணை ஒன்றை முன்வைக்க வேண்டும் என்று தமிழக கட்சிகள் வலியுறுத்தப்பட்டுள்ளது.