ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது அமர்வில் மங்கள சமரவீர உரையாற்றவுள்ளார்

358 0

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது அமர்வில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உரையாற்றவுள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது அமர்வு, பெப்ரவரி 27ஆம் திகதி முதல் மார்ச் 24ஆம் திகதிவரை ஜெனீவாவில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், பெப்ரவரி 28ஆம் திகதி நடைபெறவுள்ள உயர்மட்ட அமர்வில், இலங்கையின் தற்கால அபிவிருத்திகள் தொடர்பில் மங்கள சமரவீர உரையாற்றவுள்ளார். இலங்கைக்கு ஆதரவான மற்றுமொரு தீர்மானம் நிறைவேற்றிக் கொள்ளும் முனைப்புக்களில் இலங்கை தீவிரம் காட்டி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்திக்கொள்வதற்கு சர்வதேசத்தினால் நீண்ட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை விவகாரம் தொடர்பிலான விவாதம் எதிர்வரும் மார்ச் 22ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இவ்வமர்வில் ஐ.நா. மனிதஉரிமைகள் உயர்ஸ்தானிகர் ஷெய்ட் அல் ஹுஸைனினால் கடந்தவருடம் முன்வைக்கப்பட்ட இலங்கை தொடர்பாக அறிக்கையை அடியொட்டியே விவாதம் இடம்பெறவுள்ளதாக அறியமுடிகிறது.