மரண தண்டனை கைதிகள் 60 பேருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மன்னிப்பு வழங்கியுள்ளார்

405 0

69ஆவது சுதந்திரத் தினத்தை​முன்னிட்டு, மரண தண்டனை கைதிகள் 60 பேருக்கு ஜனாதிபதிமைத்திரிபால சிறிசேன மன்னிப்பு வழங்கியுள்ளார்.

இந்த கைதிகளின் மரண தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அனுமதி வழங்கியுள்ளார். நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் பரிந்துரைக்கமைய, இந்த அனுமதியை ஜனாதிபதி வழங்கியுள்ளார்.

ஒய்வுப்பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர். நிமல் ஈ.திஸாநாயக்க தலைமையிலான குழுவினால், தெரிவு செய்யப்பட்ட 60 மரண தண்டனை கைதிகளின் தண்டனை குறைக்கப்பட்டுள்ளது.