என்னை யாரும் புகழ்ந்து பேச வேண்டாம்: மு.க.ஸ்டாலின்

Posted by - February 2, 2017

திருமண விழாக்களில் என்னை யாரும் புகழ்ந்து பேச வேண்டாம் என நடிகர் வாகை சந்திரசேகரின் மகள் திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் பேசினார்.

ரெயில்வே திட்டங்களில் தமிழகம் புறக்கணிப்பு

Posted by - February 2, 2017

ரெயில்வே பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்பதே உண்மை என முன்னாள் ரெயில்வே மந்திரி ஏ.கே. மூர்த்தி கருத்து தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஸவும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – சம்பந்தன் கோரிக்கை

Posted by - February 1, 2017

பிரிக்கப்படாத நாட்டுக்குள் நிரந்தர அரசியில் தீர்வை காண, மஹிந்த ராஜபக்ஸவும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி ஆதர மருத்துவ மனைக்கான புதிய வெளி நோயாளர் சிகிச்சை பிரிவு மற்றும் நோயாளர் விடுதி தொகுதி திறப்பு விழா இன்று ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது. இந்தநிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே எதிர்கட்சி தலைவர் இந்த கோரிக்கையை விடுத்தார். இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,

தனித்து போட்டியிட தயார் – மஹிந்த

Posted by - February 1, 2017

எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தல்களில் ஒன்றிணைந்த எதிர்கட்சி தனித்து போட்டியிட தயாராவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். சிலாபம், ஆராய்ச்சிகட்டுவவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார். இதனிடையே வடக்கில் இடம்பெற்று வரும் நிலபரங்களை நோக்கும் போது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தோன்றுவதாகவும் மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டார்.

மிருசுவில் பொதுமக்களை கொலை சம்பவம் – குற்றவாளியின் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

Posted by - February 1, 2017

யாழ்ப்பாணம் – மிருசுவில் பிரசேத்தில் 8 தமிழ் பொதுமக்களை கொலை செய்த சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இராணுவ வீரரான சுனில் ரத்நாயக்கவினால் தாக்கல் செய்யப்பட்ட மீள்திருத்தப்பட்ட மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. உயர் நீதிமன்றம் இன்று இதனை அறிவித்தது. இந்த மனு உயர் நீதிமன்ற நீதியரசர் புவனேக அலுவிஹாரே உள்ளிட்ட ஐவர் அடங்கிய நீதியரசர் குழாம் முன்னிலையில் இன்று ஆராயப்பட்டது. இதற்கமைய எதிர்வரும் ஜூலை மாதம் 5, 6, 7, 12, 13, மற்றும் 14

கருணாவின் பிணை நிபந்தனையில் தளர்வு

Posted by - February 1, 2017

வாகன மோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள கருணா அம்மான் என அறியப்படும் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்;த்தி முரளிதரனின் பிணை நிபந்தனை தளர்த்தப்பட்டது. கருணா அம்மானின் சட்டத்தரணி நீதிமன்றத்தில் விடுத்த கோரிக்கைக்கு அமைய கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க இதற்கான உத்தரவை இன்று பிறப்பித்துள்ளார். ஒவ்வொரு வாரமும் காவல்துறை நிதி மோசடி விசாரணைப் பிரிவில் கருணா அம்மான் முன்னிலையாகுமாறு, அவருக்கு பிணை வழங்கும் போது நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. எனினும்; பாதுகாப்பு காரணங்களின் அடிப்படையில் இந்த நிபந்தனையை தளர்த்துமாறு அவரது

சுமந்திரனை கொலை முயற்சி – உலக தமிழர் பேரவை கண்டனம்

Posted by - February 1, 2017

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்ய முயற்சிக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், உலக தமிழர் பேரவை கண்டனம் தெரிவித்துள்ளது. அதன் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் வைத்து சுமந்திரனை கொலை செய்வதற்கான முயற்சி எடுக்கப்பட்டதாகவும், புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த முயற்சி தொடர்பில் தாங்கள் அதிர்ச்சி அடைவதாக உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. இந்த கொலை முயற்சியை தக்க ரீதியாக அறிந்து முறியடிக்க உதவிய

ஆட்கடத்தல் குற்றச்சாட்டு – கனடாவில் மேலும் நான்கு பேர் விடுவிப்பு

Posted by - February 1, 2017

ஆட்கடத்தல் குற்றம் சுமத்தப்பட்டு கனடாவில் கைது செய்யப்பட்டிருந்த மேலும் நான்கு பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே எம்.வீ.சன்சீ கப்பல் மூலம் 492 ஈழத்தவர்களை கடனாவுக்கு அழைத்துச் சென்றமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த நான்கு பேர் விடுவிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் நான்காம் சந்தேக ஆள் குறித்த தீர்ப்பு இன்னும் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் 2009ஆம் ஆண்டு எம்.வீ. ஓசியன் லேடி கப்பல் மூலம் 72 ஈழத்தவர்களை கனடாவுக்கு அழைத்துச் சென்றமைக்காக, ஆட்கடத்தல் குற்றம் சுமத்தப்பட்டிருந்த நால்வரை வன்குவார் நீதிமன்றம் விடுவித்துள்ளது. ஃப்ரான்சிஸ்

மட்டு.களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் புதிய கட்டடத் தொகுதி ஜனாதிபதி திறந்து வைப்பு

Posted by - February 1, 2017

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் புதிதாக நிருமாணிக்கப்பட்ட கட்டடத் தொகுதியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் காலை உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. 514 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கிட்டில் ஜெய்க்காத் திட்டத்தின் கீழ் நிருமாணிக்கப்பட்ட இவ்வைத்தியசாலையில் சகல மருத்துவ வசதிகளுடன் அமையப்பெற்றுள்ளது. இந்நிகழ்வில் எதிர் கட்சித்தலைவர் இரா.சம்மந்தன், சுகாதார அமைச்சர் ராஜித சேனாரெத்தின, கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்ரின் பெர்னாண்டோ, இலங்கை;கான ஜப்பானிய தூதுவர் கெனிசி சுகனுமா, கிழக்கு மாகாண முதலதைமச்சர் நஸீர் அஹமட், மற்றும்

அமரர் பொன்.விநாயகமூர்த்தி நினைவாக பஸ் தரிப்பிடம்

Posted by - February 1, 2017

கிளிநொச்சி ஏ-9 வீதியில் பழைய வைத்தியசாலைக்கு அருகில் அமரர் பொன்.விநாயகமூர்த்தி மற்றும் அவரது மகனான வி.சந்துரு ஆகியோர் நினைவாக அமைக்கப்பட்ட பஸ் தரிப்பிடம் இன்று திறந்த வைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்திப்பணிகளிலும் மக்கள் சேவைகளிலும் முன்மாதிரியாகத் திகழ்ந்து கிளிநொச்சி மாவட்டத்தில் ஆயலயநிர்வாகம் கிராம அபிவிருத்திச் சங்கம் இலங்கைச்செஞ்சிலுவைச்சங்கம் கிளிநொச்சி பிரஜைகள் குழு அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தலைவர் வன்னிக்கல்வி பேரவை தலைவர் கிளி வைத்தியசாலை அபிவிருத்தி சபை உள்ளிட்ட 21 அமைப்புக்களின் அங்கத்துவம் பெற்று தன்னுடைய