ஆட்கடத்தல் குற்றச்சாட்டு – கனடாவில் மேலும் நான்கு பேர் விடுவிப்பு

339 0

ஆட்கடத்தல் குற்றம் சுமத்தப்பட்டு கனடாவில் கைது செய்யப்பட்டிருந்த மேலும் நான்கு பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே எம்.வீ.சன்சீ கப்பல் மூலம் 492 ஈழத்தவர்களை கடனாவுக்கு அழைத்துச் சென்றமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த நான்கு பேர் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

அவர்களில் நான்காம் சந்தேக ஆள் குறித்த தீர்ப்பு இன்னும் வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் 2009ஆம் ஆண்டு எம்.வீ. ஓசியன் லேடி கப்பல் மூலம் 72 ஈழத்தவர்களை கனடாவுக்கு அழைத்துச் சென்றமைக்காக, ஆட்கடத்தல் குற்றம் சுமத்தப்பட்டிருந்த நால்வரை வன்குவார் நீதிமன்றம் விடுவித்துள்ளது.

ஃப்ரான்சிஸ் அந்தோனிமுத்து அப்புலோனப்பா, கமல்ராஜ் கந்தசாமி, ஜெயசந்திரன் கனகராஜ் மற்றும் விக்னராஜ் தேராஜா ஆகியோரே விடுவிக்கப்பட்டுள்ளனர்.