மட்டு.களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் புதிய கட்டடத் தொகுதி ஜனாதிபதி திறந்து வைப்பு

292 0

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் புதிதாக நிருமாணிக்கப்பட்ட கட்டடத் தொகுதியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் காலை உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

514 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கிட்டில் ஜெய்க்காத் திட்டத்தின் கீழ் நிருமாணிக்கப்பட்ட இவ்வைத்தியசாலையில் சகல மருத்துவ வசதிகளுடன் அமையப்பெற்றுள்ளது.

இந்நிகழ்வில் எதிர் கட்சித்தலைவர் இரா.சம்மந்தன், சுகாதார அமைச்சர் ராஜித சேனாரெத்தின, கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்ரின் பெர்னாண்டோ, இலங்கை;கான ஜப்பானிய தூதுவர் கெனிசி சுகனுமா, கிழக்கு மாகாண முதலதைமச்சர் நஸீர் அஹமட், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாண அமைச்சர்கள், உறுப்பினர்கள், வைத்தியர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

அவசர சிகிசைப் பிரிவு, அதிதீவிர சிகிச்சைப் பிரிவு, சத்திரசிகிச்சைக்கூடம், இரத்தவங்கி, தொற்று நீக்கல் பிரிவு, இயன் மருத்துவப் பிரிவு, மருத்துவ ஆய்வு கூடம், கதிர் வீச்சுப் பிரிவு, மகப்பேற்று விடுதி, ஆண் பெண் பராமரிப்பு விடுத்திகள்,சட்ட மருத்துவப் பிரிவு, மற்றும் வைத்தியசாலை நிருவாகப் பகுதி என்பன உள்ளிட்ட பல வசதிகள் இவ்வைத்தியசாலையில் விஸ்த்தரிக்கப்பட்டுள்ளதாக இவ்வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார்.