கிளிநொச்சியிலிருந்து கொழும்புக்கு சமாதான புறாக்கள்

Posted by - February 4, 2017

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 69ஆவது சுந்திர தினத்தை முன்னிட்டு, கிளிநொச்சியிலிருந்து கொழும்புக்கு சமாதானச் செய்தியைத் தாங்கிய புறாக்கள் பறக்கவிடப்பட்டுள்ளன. கிளிநொச்சி புகையிரத நிலைய முன்றலிருந்து பதினைந்துக்கும் மேற்பட்ட புறாக்கள் பறக்கவிடப்பட்டன. குறித்த புறாக்கள், சுமார் நான்கு மணித்தியாலயங்களில் கொழும்பைச் சென்றடையும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். சிறிய துண்டு ஒன்றில் தகவல்கள் எழுதப்பட்டு புறாக்களின் காலில் கட்டப்பட்டு, இன்று காலை 7.45 மணிக்கு புறாக்கள் பறக்கவிடப்பட்டன. புறாக்களின் கால்களில் கட்டப்பட்டுள்ள தகவல் துண்டில் தகவல் எழுதியவர்களின் அலைபேசி

இறந்தவர்கள் தோற்றதாகவும் இருப்பவர்கள் வெற்றியீட்டியதாகவும் எண்ண கூடாது – ஜனாதிபதி

Posted by - February 4, 2017

இலங்கையின் 69ஆவது சுதந்திர தினம் இன்று காலிமுகத்திடலில் இடம்பெற்றுவரும் நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இறந்தவர்கள் தோற்றதாகவும் இருப்பவர்கள் வெற்றியீட்டியதாகவும் என்ன கூடாது என குறிப்பிட்டார். இன்று நாம் 69ஆவது சுதந்திரதினத்தை நாம் கொண்டாடுவதற்கு அன்று சுதந்திரத்திற்காக போராடிய ஒவ்வொருவரையும் நினைவில் கொள்வது எமது கடமையாகும். சுதந்திரதினம் என்பது ஒவ்வொருநாட்டின் யதார்த்தமாகும். உலகில் 6000 மொழிகள் பேசப்படுகின்றது. ஆனாலும், சுதந்திரம் என்ற சொல் ஒவ்வொரு நாட்டிலும் விசேட தன்மையுடையதாகவே  காணப்படுகின்றது. இதனடிப்படையில், 21ஆம் நூற்றாண்டில் காலடி எடுத்து

குவைட்டில் தாக்குதலுக்குள்ளான இலங்கைப் பெண்

Posted by - February 4, 2017

குவைட்டில் பணிபுரிந்து வந்த இலங்கைப் பெண்ணொருவர் அடையாளம் தெரியாத நபர்களின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குவைட்டின் ஜகரா பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விளையாடுவதற்கு அணியபடும் ஆடையுடன் காணப்பட்ட நபர் ஒருவரே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக குவைட் தூதுவராலயம் தெரிவித்துள்ளது. பல வருடங்களாக குவைட்டில் பணிபுரியும் 46 வயதான பெண்ணின் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக குவைட் தகவல்கள் தெரிவித்துள்ளன. தாக்குதலுக்கு உள்ளான பெண் அவரது வீட்டு எஜமானுடன் குவைட் பொலிஸ் நிலைலயத்திற்கு சென்று முறையிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன்,அண்மைக்காலமாக

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கலைக்கப்படுமா?

Posted by - February 4, 2017

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடமானது இன்று ஒன்று கூடவுள்ளது. கட்சியின் தலைவரும் நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில்இன்று கூடவுள்ளது. இதன்போது எதிர்பார்க்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது குறித்து, வெளியாகியுள்ள எல்லை நிர்ணய சபையின் அறிக்கை தொடர்பிலும், இதன்போது ஆராயப்பட இருப்பதாகத் தகவல்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை, கொழும்பிலுள்ள தலைமையகமான தாருஸ்ஸலாமில் கடந்த ஜனவரி மாதம் 2ஆம் திகதி கூடிய உயர்பீடக் கூட்டத்தில், பெரும் சர்ச்சைக்குள்ளாகியிருந்த ஸ்ரீ லங்கா

டுபாயை பின்பற்றி ‘கொள்வனவு விழா’ நடத்த இலங்கை திட்டம்

Posted by - February 4, 2017

சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் பாரிய ‘கொள்வனவு விழா’ ஒன்றை நடத்த இலங்கை திட்டமிட்டுள்ளது. நிதி அமைச்சருக்கும் இலங்கை விற்பனையாளர்கள் சங்கத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது இது குறித்து ஆராயப்பட்டுளளது. டுபாயில் இடம்பெறும் உலகின் பிரசித்தமான ‘டுபாய் கொள்வனவு விழாவைப்’போல் இதனை நடத்த இலங்கை தீர்மானித்துள்ளதாக நேற்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிய, மத்திய கிழக்கு, ஐரோப்பிய சுற்றுலா பயணிகளைக் கவருவதே இந்த கொள்வனவு விழாவின் நோக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை

Posted by - February 4, 2017

ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது. அண்மையில் ஏவுகணை பரிசோதனை ஒன்றை ஈரான் நடத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடையை விதிக்கப்பட்டுள்ளது. சீனா, ஐக்கிய அரபு ராச்சியம் மற்றும் லெபனான் ஆகிய நாடுகளில் உள்ள சில குழுமங்கள், ஆட்களுக்கும் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக இந்த பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது குறித்து தனது டுவிட்டர் வலைதளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொலால்ட் ட்ரம்ப்,

இலங்கையின் 69வது சுதந்திர தின நிகழ்வுகள் ஜனாதிபதி தலைமையில் – ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து

Posted by - February 4, 2017

இலங்கையின் 69வது சுதந்திர தின நிகழ்வுகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் காலி முகத்திடலில் தற்சமயம் இடம்பெறுகின்றன இதனை முன்னிட்டு கொழும்பு கோட்டை வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், விசேட போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 7 ஆயிரத்து 782 படையினர்களின் பங்கேற்புடன் சுதந்திர தின பேரணி இடம்பெறவுள்ளது. நீதி மற்றும் சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட புதியதோர் தேசத்தில் சமாதானமும் சுபீட்சமும் கிடைக்கப்பெற்ற மக்களாக வாழும் பாக்கியம் எமக்கு கிட்ட வேண்டும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சுதந்திர தினத்தை

நீரைப் பெற்றுக் கொடுக்க நிதி சேகரிக்கவேண்டிய நிலை – ரணில்

Posted by - February 4, 2017

மக்களுக்கு நீரைப் பெற்றுக் கொடுப்பதற்காக நிதி சேகரிக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஹோமாகப பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டின் 50 சதீவீதமான மக்களுக்கு மாத்திரமே நீர் விநியோகிக்கப்படுவதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

சிறுபான்மை மக்களின் உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும் – சந்திரிகா

Posted by - February 4, 2017

அரசியல் அமைப்பின் மூலம் இந்த சிறுபான்மை மக்களின் உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கத்தினால் சமூக பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காண்பதுடன், பல்வேறு வேலைத்திட்டங்களையும் வெற்றிகரமாக முன்னெடுத்து வருகின்றது. கடந்த காலத்தில் ஏற்பட்ட மத ரீதியான முரண்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. புதிய அரசியல் அமைப்பு எதற்காக என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர். அரசியல் அமைப்பின் மூலமே சிறுபான்மை

மாகாண அடிப்படையில் இல்லாமல் நாடு என்ற அடிப்படையில் அனைவரும் நிற்கும் காலம் உருவாகியுள்ளது – ஜனாதிபதி

Posted by - February 4, 2017

மாகாண அடிப்படையில் இல்லாமல் நாடு என்ற அடிப்படையில் அனைவரும் நிற்கும் காலம் உருவாகியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். நாடு சுதந்திரம் பெற்றபோது அனைத்து இனங்களும் ஒற்றுமையுடன் இருந்தன. அந்த ஒற்றுமை படிப்படியாக சீர்குலைந்தது. கட்சி அரசியலே அதற்கு பிரதான காரணமாகும். இன்று பிரிவினைக்கு வழிவகுக்கும் வகையிலேயே பெரும்பாலான கட்சிகள் பதிவுசெய்யப்படுகின்றன. இவ்வாறு பதிவுசெய்யப்படுவதற்கு சந்தர்ப்பம் வழங்கக் கூடாது. இந்தப் பிரிவினையின் காரணமாகத்தான் நாட்டில்