சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் பாரிய ‘கொள்வனவு விழா’ ஒன்றை நடத்த இலங்கை திட்டமிட்டுள்ளது.
நிதி அமைச்சருக்கும் இலங்கை விற்பனையாளர்கள் சங்கத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது இது குறித்து ஆராயப்பட்டுளளது.
டுபாயில் இடம்பெறும் உலகின் பிரசித்தமான ‘டுபாய் கொள்வனவு விழாவைப்’போல் இதனை நடத்த இலங்கை தீர்மானித்துள்ளதாக நேற்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிய, மத்திய கிழக்கு, ஐரோப்பிய சுற்றுலா பயணிகளைக் கவருவதே இந்த கொள்வனவு விழாவின் நோக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

