குவைட்டில் தாக்குதலுக்குள்ளான இலங்கைப் பெண்

373 0

குவைட்டில் பணிபுரிந்து வந்த இலங்கைப் பெண்ணொருவர் அடையாளம் தெரியாத நபர்களின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைட்டின் ஜகரா பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளையாடுவதற்கு அணியபடும் ஆடையுடன் காணப்பட்ட நபர் ஒருவரே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக குவைட் தூதுவராலயம் தெரிவித்துள்ளது.

பல வருடங்களாக குவைட்டில் பணிபுரியும் 46 வயதான பெண்ணின் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக குவைட் தகவல்கள் தெரிவித்துள்ளன.

தாக்குதலுக்கு உள்ளான பெண் அவரது வீட்டு எஜமானுடன் குவைட் பொலிஸ் நிலைலயத்திற்கு சென்று முறையிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன்,அண்மைக்காலமாக ஜகரா பிரதேசத்தில் பெண்கள் மீதான இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.