ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது.
அண்மையில் ஏவுகணை பரிசோதனை ஒன்றை ஈரான் நடத்தியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடையை விதிக்கப்பட்டுள்ளது.
சீனா, ஐக்கிய அரபு ராச்சியம் மற்றும் லெபனான் ஆகிய நாடுகளில் உள்ள சில குழுமங்கள், ஆட்களுக்கும் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக இந்த பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது குறித்து தனது டுவிட்டர் வலைதளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொலால்ட் ட்ரம்ப்,
‘ஈரான் நெருப்புடன் விளையாடுகின்றது.
இதற்கு ஒபாமா எவ்வாறு இணங்கினார் என்று தெரியவில்லை.
தான் அப்படியல்ல’ என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதேவளை, வடகொரியா, அணு ஆயுத பிரயோகம் எதையாவது மேற்கொண்டால், அதற்கு எதிராக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென் கொரியாவிற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்ட அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஜேம்ஸ் மற்றிஸ் இந்த எச்சரிக்கை விடுத்துள்ளார்.

