ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கலைக்கப்படுமா?

373 0

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடமானது இன்று ஒன்று கூடவுள்ளது.

கட்சியின் தலைவரும் நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில்இன்று கூடவுள்ளது.

இதன்போது எதிர்பார்க்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது குறித்து, வெளியாகியுள்ள எல்லை நிர்ணய சபையின் அறிக்கை தொடர்பிலும், இதன்போது ஆராயப்பட இருப்பதாகத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, கொழும்பிலுள்ள தலைமையகமான தாருஸ்ஸலாமில் கடந்த ஜனவரி மாதம் 2ஆம் திகதி கூடிய உயர்பீடக் கூட்டத்தில், பெரும் சர்ச்சைக்குள்ளாகியிருந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் விவகாரம் குறித்து ஆராயப்பட்டு, இறுதி முடிவு எட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டதுடன்,முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் எம்.ரி.ஹசனலிக்கு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை வழங்குவதாக, முன்னர் கூறப்பட்ட போதும், இன்றுவரையிலும் அவருக்கு, அப்பதவி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத்தும் இந்த உயர்பீடக் கூட்டத்தில் கலந்துகொள்வார் என கட்சி வட்டாரங்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளன.